விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் இன்னும் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் இதுவரை மட்டுமே 250 கோடிகளை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் சில விநியோகஸ்தர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என கூறி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கு ஒன்றின் உரிமையாளர் இப்படத்தின் வசூலை பற்றி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், சர்கார் படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை மட்டும் 18 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்தர் ஒருவர் வாங்கினார். ஆனால் படம் இதுவரை 10 கோடி ரூபாயை தான் வசூலித்து உள்ளது. அதிலும் ஜி.எஸ்.டி.யை எல்லாம் கழித்து பார்த்தால் 6 கோடி ரூபாய் மட்டுமே கையில் இருக்கும்.
இப்படம் வெளிவந்த 3 நாட்களுக்கு மட்டுமே வசூலை நன்றாக ஈட்டியது. அதன்பின் மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு இல்லை. அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் தான் சீரான வசூலை தருகிறது. சீமராஜா படத்தின் அளவுக்கு கூட சர்கார் லாபகரமான வசூலை தரவில்லை என்றார்.
ஆனால் இந்த பேட்டி எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஏனெனில் யூடியுப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.