ஒவ்வொரு காமெடியனுக்கும் ஒவ்வொரு காலம் இருக்கும் அந்த வகையில் இது யோகிபாபுவின் காலம். ஏனெனில் வாரா வாரம் வெள்ளிகிழமை கரெக்ட்டா வந்துவிடுகிறார்.
அவர் இப்போது விஜய்யின் சர்காரிலும் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் நயன்தாராவோடு டூயட் பாடியிருக்கும் கோலமாவு கோகிலா படமும் விரைவில் திரைக்குவர இருக்கிறது.
இந்நிலையில் இவர் ஆரம்ப காலத்தில் சந்தானம், மனோகர் போன்றோர் வந்த லொள்ளு சபாவிலும் நடித்துள்ளராம். இதை அவரே தெரிவித்து லொள்ளு சபாவில் அவர் நடித்திருந்த ஒரு புகைப்படத்தையும் டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
Naangalum Olli dhaan orukalathula pic.twitter.com/D0qlIxVW8G
— Yogi Babu (@yogibabu_offl) August 1, 2018