சர்க்கரையினை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்கள்

175

நம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி உண்ணும் உணவில் இருந்தே பெறப்படுகிறது. இதில் காய்கறிகளும், பழங்களும் பெரும்பங்கினை வகிக்கிறது.

காய்கறிகள் உடலுக்கு பலத்தினைத் தருவதோடு எதிர்ப்பு சக்தியினையும் அளிக்கிறது. அந்த வரிசையில் நம் உடலுக்கு நன்மை தருவது பீன்ஸ்.

பீன்ஸ் சாப்பிடுவதன் பலன்கள்
  • பீன்ஸில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுனோய் ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியினைத் தடுத்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
  • இதில் உள்ள கார்போஹைரேட் இரத்தத்தில் மெதுவாக கரைவதால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.
  • போலேட் எனும் சத்துள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் உணவில் சேர்த்து கொள்ளும் போது சிசு வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • உயர் இரத்த அழுத்தம், இதய படபடப்பு உள்ளவர்கள் பீன்ஸினை உணவில் சேர்த்து கொள்வதால் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகித்து ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • பீன்ஸில் விட்டமின் பி6, பி, தையமின் போன்ற சத்துக்கள் உள்ளதால் எழும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும்.
  • இரும்புசக்தியை கிரக்கிக்கும் தன்மையுள்ளது. எனவே செரிமான சக்தியினை அதிகரித்து, வாயுத்தொல்லையினை நீக்கும்.
  • பீன்ஸில் உள்ள லெசித்தின் எனும் நார்சத்து கொழுப்பினைக் கரைத்து இரத்தகுழாய்களில் ஏற்படும் அடைப்பினை சரிசெய்கிறது.
பீன்ஸில் உள்ள சத்துக்கள்
  • பீன்ஸில் அதிகளவு நார்சத்தானதுள்ளதால் பெருங்குடல் நோயெதிர்ப்பு தன்மையுடன் இருப்பதற்கும், குடல் புற்றுநோயினை தடுக்கிறது. இரத்தத்தில் கொழுப்பினைக் குறைக்கிறது.
  • விட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை கோளாறை கட்டுபடுத்தும். இதில் உள்ள பீட்டா கரோட்டின், லுடின் போன்றவை ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கிறது.
  • ஸி-சாந்தின் புறஊதாக்கதிர்களில் இருந்து கண்களின் ரெட்டினாவை காக்கிறது.
  • பீன்ஸில் உள்ள விட்டமின் 12 டி.என்.ஏ இணைப்பு மற்றும் செல் பகுப்பில் பயன்படுகிறது. மேலும் மாதவிடாய் மற்றும் கர்ப்பகாலத்தில் நரம்புக்குழாய் பாதுகாக்கப் பயன்படுகிறது.
  • விட்டமின் சி, பி-6, தையமின் பி1 ஆகியவை நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கிறது.
  • இதில் உள்ள பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்கள் வளர்ச்சிக்கும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுபாட்டில் வைக்க உதவுகிறது.
SHARE