பாகற்காய் வகையைச் சேர்ந்த அதலைக்காய் புற்றுநோய், மஞ்சள் காமாலை, சர்க்கரை நோய் என அனைத்து வித நோய்களுக்கும் தீர்வளிக்கிறது.
அதலைக்காய்
இந்த காயில் நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மழைக்காலங்களில் அதலைக்காய் சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் தானாகவே விளையத் தொடங்கும்.
மிகுந்த கசப்பு சுவையுடைய அதலைக்காயை பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம். ஆனால், இதனை சாம்பாராக வைக்க முடியாது.
கிடைக்கும் நன்மைகள்
சர்க்கரை நோய்
இதன் சதைப்பகுதியானது இன்சுலினைப் போல செயல்படக்கூடியது. இதன்மூலம் உடலில் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். ஏனெனில், உடலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இன்சுலின் அவசியமாகும்.
புற்றுநோய்
அதலைக்காயில் உள்ள சத்துக்கள், புற்றுநோய் செல்கள் ரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை தடுக்கும். அத்துடன் அதலைக்காய் கணையத்தையும் பாதுகாக்கும்.
இந்தக் காயில் உள்ள லெய்ச்சின் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களின் பாதிப்பையும் தடுக்கும். எனவே, இந்த காயை தொடர்ந்து உண்டு வந்தால் கணைய புற்றுநோய் வரவதை தடுக்கலாம்.
சிறுநீரக செயல்பாடு
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக அதலைக்காயை உண்ண வேண்டும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் விரைவில் கறைய தொடங்கும். இதில் உள்ள பைடோநியூட்ரின் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும்.
மஞ்சள் காமாலை
வைட்டமின் டி குறைப்பாட்டினால் ஏற்படும் மஞ்சள் காமாலையை, அதலைக்காயைக் கொண்டு குணப்படுத்தலாம். அதலைக்காயில் உள்ள ஆல்பமின் மஞ்சள் காமாலையை சரிசெய்ய உதவுகிறது. எனவே, அதலைக்காயை தினமும் உணவில் சேர்த்து வர வேண்டும்.
எய்ட்ஸ்
அதலைக்காய் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இதன்மூலம், HIV கிருமிகளின் தாக்கம் குறையும். எனவே, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த காயை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இது கருகலைப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பருக்களை குறைக்கும் அதலைக்காய்
அதலைக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் முகப்பருக்களை சரி செய்யும். அத்துடன் முகப்பருக்கள் வராமல் தடுக்கவும் இது உதவும்.
செரிமானம்
மற்ற காய்கறிகளை விட அதலைக்காயில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன்மூலம், ரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். மேலும் அதலைக்காயில் பொட்டாசியம், மோமோர்டியல் அமிலம், கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை பாதுகாக்கும்.
உடல் எடை குறைப்பு
அதலைக்காய் பசியுணர்வை கட்டுப்படுத்தும். எனவே, அதிகளவு உணவு உண்ணும் எண்ணத்தை குறைத்து, பசி அடங்கிய உணர்வை தரும்.
இந்த காயில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளதால், எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த காயை தங்களது உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.