சர்ச்சையான பிரபலங்கள் ஆன ரஜினி, விஜய்- முன்னணி நிறுவனம் வெளியீடு

485

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக திகழ்பவர் ரஜினி. இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர்கள் இருவரையும் சர்ச்சையான பிரபலங்கள் என்று ஒரு முன்னணி நிறுவனம் சர்வே முடிவில் வெளியிட்டுள்ளது.

அது வேறு ஒன்றும் இல்லை, விக்கிபீடியா நிறுவனம் சமீபத்தில் ஒரு கருத்துக்கனிப்பை நடத்தியது, இதில் அதிக முறை விக்கிபீடியாவை மாற்றிய பிரபலங்கள் யார் என்று ஒரு சர்வே வெளியிட்டுள்ளது.

இதில் 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தை 17,736 முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் பக்கம் 11,360 முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதை சர்ச்சையான பிரபலங்கள் என்ற தலைப்பில் அவர்கள் வெளியீட்டுள்ளனர்.

SHARE