சர்ச்சையில் சிக்கிய மகேஷ் பாபு

185

நடிகர் மகேஷ் பாபு பலகோடி செலவில் சென்ற ஆண்டு ஒரு புதிய மல்டிபிளக்ஸ் துவங்கினார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் 2.0 படம் தான் முதல் படமாக அங்கு வெளியானது.

சமீபத்தில் அரசு சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்திருந்தது. அதனால் நாடு முழுவதும் டிக்கெட் விலைகள் குறைந்தது.

ஆனால் நடிகர் மகேஷ் பாபுவுக்கு சொந்தமான AMB சினிமாஸ் மல்டி பிளெக்ஸில் டிக்கெட் விலையை குறைக்காமல் இருந்துள்ளனர். இதன் மூலம் ஒரு மாதத்தில் 35 லட்சம் அதிகம் லாபம் கிடைத்துள்ளது.

இது பற்றி அறிந்த அதிகாரிகள் தற்போது சோதனை செய்து consumer welfare fundக்கு 35 லட்சம் ருபாய் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் 35 லட்சம் என்பது அதிகமான தொகை, எங்களுக்கு 20 முதல் 25 லட்சம் வரை தான் வரிகுறைப்பால் லாபம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

SHARE