சர்வதேச அளவில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் மோசமான பராமரிப்புடன், அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள காட்சிகள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதியான Rodrigo Duterte அந்நாட்டில் போதை பொருள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
கடந்த யூலை மாதம் முதல் போதை பொருள் கடத்திய குற்றங்களுக்காக பலருக்கு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும், பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட காரணங்களுக்காக கைது நடவடிக்கையும் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களை கொத்தடிமைகளுக்கும் கீழ்த்தரமாக சிறைகளில் அடைத்து வைக்கும் கொடுமை அங்கே நிகழ்ந்து வருகிறது.
குறிப்பாக, Quezon நகர சிறைச்சாலையில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் தலா 30 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி இச்சிறை அறைகள் ஒவ்வொன்றிலும் 130 கைதிகளுக்கு மேல் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
ஒட்டுமொத்த அறைகளிலும் 800 கைதிகள் மட்டுமே அடைத்து வைக்க வேண்டும். ஆனால், கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தற்போது இச்சிறைச்சாலையில் 3,000 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இரவில் தூங்கும்போது கால்களை நீட்டிக் கூட படுக்க முடியாது. சில நேரங்களில் ஒருவர் மீது ஒருவர் படுத்து தூங்கும் அவலமும் அங்கு நிகழ்ந்து வருவது பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.



