சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்களினால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

247
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்களினால் லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டத்தில் பெருமளவிலான தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக காலநிலை மாற்றத்தினையும் கருத்தில் கொள்ளாது கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது பிரிட்டன் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக மாலை 4:00க்கு ஆரம்பித்து இரவு 7:00 வரை நடைபெற்றது.
இதுவரையில் இலங்கையில் 140000 க்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் அவர்கள் தொடர்பான உண்மை நிலை என்ன உயிருடன் உள்ளார்களா ஐநா வே எமக்கான தீர்வு எப்போது போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டதா பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE