சர்வதேச கிரிக்கட் சபை ஸ்ரீ லங்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

187

எதிர்வரும் 6 மாதக்காலப்பகுதிற்குள் கிரிக்கட் சபையின் தேர்தலை ஸ்ரீ லங்கா நடத்தாது போனால் பேரவையின் உறுப்புரிமை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டியேற்படும் என்று சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரித்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஐந்து நாள் வருடாந்த அமர்வு அயர்லாந்து டப்லினில் நேற்று நிறைவடைந்தது.

இதில் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரை பிரதிநிதியாக அமர்ந்து கண்காணிப்பாளராக செயற்பட சர்வதேச கிரிக்கட் பேரவை இணக்கம் வெளியிட்டது.

எனினும் 6 மாதக்காலத்துக்குள் தேர்தலை நடத்தாதுபோனால் சர்வதேச கிரிக்கட் பேரவையின் உறுப்புரிமை குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் என்று பேரவை எச்சரித்தது.

இது குறித்து கருத்து வெளியிட்ட சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் சசாங் மனோஹர், கிரிக்கட்டின் பல பில்லியன் பார்வையாளர்களுக்கு கிரிக்கட்டின் இறைமை குறித்து சந்தேகம் வராத வகையில் செயற்பாடுகள் அமையவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE