இராணுவ நடவடிக்கையின் பொழுது பிரபாகரனும், அவருடைய சகாக்களும் இந்திய அரசினால் காப்பாற்றப்பட்டனர்.

633

 

 

hqdefault

யுத்தம் நிறைவடைந்து 05 வருடங்கள் தாண்டிய இந்நிலையில், பேச்சுவார்த்தை என்கின்ற போர்வையில் உலகநாடுகள் இலங்கையரசின் மீது அக்கறைகாட்டிவருகின்றன. இதனூடாக மேம்பால அபிவிருத்திகள், வீதி, துறை முகம், தொழிற்சாலைகள், கைத்தொழில், போன்றவற்றை இலங்கையில் கடன் மார்க்கமாகவும், கடனற்ற மார்க்கமாகவும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்திய அரசினைப் பொறுத்தவரையில், இலங்கையின் நட்புறவு நாடாக ஆரம்பகாலத்திலிருந்தே செயற்பட்டு வருகின்றது. இந்த விடுதலைப்புலிகளின் போராட்டத்தை தோற்கடிப்பதற்கு இந்தியாவும் ஒரு காரணமாக அமையப்பெறுகின்றது. அந்த அடிப்படையில் இந்தியரசினுடைய முதலீடுகள் இலங்கையில் 75வீதமாக காணப்படுகின்றது.

இலங்கையரசும் இந்தியாவைப் பகைத்துக்கொள்ளும் ஒரு சூழ்நிலை காணப்பட்டால் இலங்கைப் பொருளா தாரம் மிகவும் பாதிக்கப்படும். மட்டுமல்லாது இந்தியா இலங்கைக்கு எதிரியாக மாறிவிடும் என்கின்ற காரணத்தினாலும், வருங்காலங்களில் போர் தந்திர நடைமுறைக்கு இலங்கையின் தளங்கள் தேவைப்படும் என்கின்ற காரணத்தினால் இந்தியரசு இலங்கையைப் பகைத்துக்கொள்ளாது செயற்படுகின்றது. இந்தியரசு இலங்கையரசுடன் நட்புறவாக செயற்படுவதைக் கன்காணித்துவந்த சீன அரசு எவ்வாறு இலங்கைக்குள் காலடி எடுத்துவை ப்பது என்று எண்ணியிருந்தபொழுது, விடுதலைப்புலிகளுடனான யுத்தம் அதற்கு சாதகமாக அமைந்தது.

வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளுள் சீனாவும் அங்கத்துவம் கொள்வதால் அதனையும் நட்புறவு நாடாக வைத்திருக்க இலங்கை தீர்மானித்தது. சீன நாட்டினைப் பொறுத்தவரையில் எந்த நாட்டோடு நட்புறவை வைத்துக்கொண்டாலும் அங்கு ஒரு சிறிய சீன கொலனியை உருவாக்கிவிடும். அவர்களுடைய வானொலி நிலை யம், உடை நாகரிக நிலையங்கள், சீன நாட்டின் பாவணைப்பொருட்கள் என்பன முதலில் இலங்கைக்கு அனுப்பப்பட்டு அதிலிருந்து தமது முதலீ டுகளை அபிவிருத்தி செய்துகொண்டு விடுதலைப்புலிகளுடனான போராட் ;டத்தை முறியடிப்பதற்கு சீன அரசு ஆயுத தளபாடங்களையும் வழங்கி இலங்கை நாட்டில் தனது காலை ஊன்றிக்கொண்டது.

அதன் பிறகு ஊன்றிய காலை திருப்பி எடுக்காதவகையிலும் இலவச உதவிகளை சீன அரசு இலங்கைக்கு வழங்கிக்கொண்டே வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், இன்னும் பல கைத்தொழில் நிறுவனங்களையும் சீன அரசு இலங்கையில் நிறுவியுள்ளது. ஒருசிலவற்றை கடனா கவும், ஒருசிலவற்றை மானியமாகவும் வழங்கியுள்ளது. ஆகமொத்தத்தில் இந்தியா, சீனா ஆகிய இரு அரசுக ளுமே இலங்கை நாட்டினை விட்டு பிரிக்கமுடியாதளவிற்கு அவர்களுடைய நட்புறவை தடம்பதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாத அமெரிக்க அரசு எவ்வாறு இலங்கையரசை தனது நட்பு நாடாக மாற்றிக்கொள்வது என்ற சூழ்ச்சித்திட்டங்களை வகுத்துக்கொண்டது.

அதற்கு சாதகமாக ஜெனீவாத் தீர்மானம் அமையப்பெற்றுள்ளது. இதனை ஒரு துருப்பாக வைத்துக்கொண்டு இலங்கைத்திருநாட்டை சோசலிச நாடாக மாற்றுவதற்கு அமெரிக்கரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருவது மட்டுமல்லாது இலங்கை நாட்டிற்குள் ;கால்பதிப்பதாயின் விடுதலைப்புலிகள் அமைப்பின் எஞ்சியுள்ளவர்களை வைத்தே இவ்வாறான செயற்திட்டங்களை செயற்படுத்த முடியும் என அமெரிக்க அரசு தீர்மானித்துள்ளது.

ஆகவேதான் அமெரிக்காவின் நியூயோர்க் தலைநகரில் நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவி அவர்கள் சுதந்திரமாக செயற்பட அமெரிக்கரசு வழிவகுத்துள்ளது. இவர்களை வைத்தே அடுத்த அத்தியாயத்தை தொடங்கலாம் என்பதே அவர்களின் தந்திரோபாயமாகும். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கை மீது அக்கறை காட்டினாலும் கூட அவர்கள் இலங்கைப் பிரச்சினையில் தலையிடப்போவதில்லை. இங்கு பிரச்சினை மூன்று வல்லரசு நாடுகளுடன்தான். ஆசியப்பிராந்தியத்தில் தன்னை சண்டியனாக இணைத்துக்கொள்ளும் சீனா, இந்தியா. உலக நாடுகளில் தான் சண்டியன் என நினைத்துக்கொள்ளும் அமெரிக்கரசு, சீனா இந்தியாவை விடவும் அமெரிக்கரசு தனது சர்வாதிகாரத்தின் மூலம் எதனையும் சாதித்துவிடமுடியும் என்று எண்ணியுள்ளது. அவ்வாறே அதனது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அமையப்பெற்றுள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் சர்வதேச ரீதி யாக ஒரு நாட்டிற்கு எதிராக போர்க்கட்டமைப்புக்களை செய்யக்கூடிய அதிகாரமுடையதாக அமெரிக்கா செயற்பட்டுவந்தது.

அதனொரு பகுதியே ஈராக், ஈரான், சிரியா, லிபியா போன்ற நாடுகளின் தாக்குதல்களை சுட்டிக்காட்டமுடியும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பலரது எதிர்பார்ப்புக்கள் என்னவென்றால் முள்ளிவாய்க்கால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்பதே. ஆனால் நிலைமை அவ்வாறல்ல. இந்திய அமெரிக்க அரசுகள், சீன அரசுகள் தமக்குச் சாதமாக இலங்கையரசை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தந்திரோபாய ரீதி யில் தமிழர்களுடைய பிரச்சினையை காரணம் காட்டி அவர்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்படவேண்டும். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலைகள் நிருபிக்கப்பட்டு இராணுவவீரர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படவேண்டும். அதற்காக மஹிந்த ராஜபக்ஷவை கண்டிக்கக்கூடாது. அவ்வாறு செய்த இராணுவ வீரர்களை கண்டிக்கவேண்டும் என்ற ஓரவஞ்சக செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

அமெரிக்கரசு இலங்கையரசுடன் இரட்டைவேடம் காட்டி வருகின்றது. உலகளாவிய ரீதியிலும் இலங்கையை பகைப்பதாக காட்டிக்கொள்ளும் அமெரிக்கரசு இலங்கையின் தேவை அறிந்து அனதை;து வசதி களையும் வழங்கியுள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனல் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது 250 தொலைவு மைல்களுக்கப்பால் உள்ள விடுதலைப்புலிகளின் கப்பல்களைக் காட்டிக்கொடுத்தது. இதனால் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 08 கப்பல்கள் இலங்கை இராணுவத்தால் தகர்க்கப்பட்டது.

பிரபாகரனுடைய தலைமைத்துவத்தை அமெரிக்க, சீன அரசு களோ விரும்பவில்லை. உலக நாடு களில் உள்ள அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. பிரபாகரன் சர்வாதிகாரியாக செயற்பட்டமையே. அவ்வாறு சர்வாதிகாரியாக செயற்பட்டார் என்று அமெரிக்காவோ ஏனைய நாடு களோ கூறுவதற்கு அதிகாரமற்றவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். தமிழினத்திற்காக போராடியவரை சர்வாதிகாரி என்று கூறுவது தவ றாகும். ஹிட்லர், கடாபி, இடியமீன் போன்றவர்களது நடவடிக்கைபோன்று பிரபாகரன் மேற்கொள்ளவில்லை. ஒரு இனத்தின் அடக்குமுறைக்கெதிராகப் போராடியவரே பிரபாகரன். உலக நாடுகளைப் பொறுத்தவரையில் பிரபாகரனுடைய படையணியில் தற்கொலைப்படையணியை முற்றாகத் தடைசெய்தது.

2005 ஆம் ஆண்டு வன்னிப் பேச்சுவார்த்தையின் போதும் கூட நோர்வேக்கான இலங்கை நாட்டுத் தூதுவர் எரிக்சொல்ஹேய்ம் கூட நேர டியாக வன்னியில் வைத்து உங்கள் அமைப்பில் கரும்புலிகள் அமைப்பை நீக்குவது சிறந்ததொன்றாகும் அல்லாது போனால் ஏனைய நாடுகளின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்று கூறயிருந்தார். இதனை செவிமடுக்காத பிரபாகரன் கரும்புலிகள் எமது போராட்டத்தின் மூச்சு எனக் கூறியிருந்தார். இவ்வாறான காலகட்டத்தில் பிரபாகரனை அழித்தொழிக்கவேண்டும். அவரது தலமையின் கீழான போராட்டத்தை முற்றுகைக்கு கொண்டுவரவேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டது.

ஏழு கட்ட சர்வதேச பேச்சுவார்த்தைகளின் போது பிரபா கரனுடைய பக்கம் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையப்பெற்ற நேரம் எரிக்சொல்ஹேய்மை புலிகளின் துணைத்தூதுவர் என அரசு கூறியிருந்தது. ஆனால் இறுதியில் எரிக்சொல்ஹேய்ம் அவர்கள் விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு எதிரியாகவே மாறி னார். அவருடைய இறுதிச்செயற்பாடுகள் அனைத்தும் வாழைப்பழத்தில் ஊசியினை ஏற்றுவது போல் இருந்தது. சர்வதேச ரீதி யில் உலக நாடுகளை உழுப்பிவிடும் ஒரு போர்வீரனாக பிரபாகரன் திகழ்ந்தார்.

குறிப்பாக இவருடைய போராட்டவளர்ச்சி கடல், வான், தரை, தற்கொலை என நான்கு விடயங்களினாலும் உலக நாடுகளிற்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடும் என்கின்ற வகையில், விடுதலைப்புலிகளினுடைய கையில் அணுவாயுதங்கள் சென்றடையுமாக இருந்தால் அத னுடைய தாக்கம் எத்தகைய விளைவு களை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் சர்வதேச நாடுகள் இறுதியில் விடுதலைப்புலிகளை அழிப்பது என்கின்ற தீர்மானத்தை எடுத்தது.

சமாதான பேச்சுவார்த்தைகளின் போது, 52 நாடுகளும் 22 சர்வதேச அமைப்புக்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளித்தன அமெரிக்கா உட்பட. 52 நாடுகளினுடைய தலைவர்கள் மத்தியில் பிரபாகரனுடைய போராட்டம் ஒரு வலிமைபெற்றுக்காணப்பட்டது. ஒரு சில காரணங்களுக்காக மட்டுமல்ல. அதாவது சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகள் வளர்ந்து விடுவார்கள் ஒருகாலகட்டத்தில் ஆசியப்பிராந்தியம் விடுதலைப்புலிகள் வசம் மாறிவிடுமோ என்கின்ற அச்சத்தின் காரணமாகவும், முன்பு ஆதரவு தெரிவித்த நாடுகள் அனைத்தும் விடுதலைப்புலிகளைத் தடைசெய்தது.

பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் கொலைசெய்யப்பட்டதன் காரண மாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் நிரந்தரப்பகை உருவாகியது. காலப்போக்கில் அதனது தாக்கங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு குந்தகமாக அமைந்தது. இன்று சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ள அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றது. இதில் தற்பொழுது 16 அமைப்புக்கள் இலங்கையரசினால் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறான தடை என்பது தமக்கு பெரிதல்ல என நாடுகடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறான தடைகளை ஏற்படுத்தும்படி இந்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக புலனாய்வுச்செய்திகள் தெரிவிக்கின்றன.

1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டுவரை இந்திய அரசு சர்வதேச ரீதியாக இலங்கை மீது கொண்டுள்ள கரிசணையை வெளிஉலகிற்கு எடுத்துக்காட்டும் செயற்பாடாகவே அமையப்பெற்றுள்ளது. இந்தியா நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். வல்வெட்டித்துறையில் இலங்கை இராணுவத்தினரால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பொழுது பிரபாகரனும், அவருடைய சகாக்களும் இந்திய அரசினால் காப்பாற்றப்பட்டனர்.

; முள்ளிவாய்க்கால் பகுதி யில் இராணுவ முற்றுகையில் இருந்து இந்திய அரசாங்கம் காப்பாற்றவில்லை. வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பங்கள் ஊடாக இருப்பிடங்களை கண்டறியும் துல்லிய கருவிகளை இந்திய அரசு இறுதி நேரத்தில் வழங்கியிருந்தது. தற்பொழுதும் கூட இலங்கையரசு சர்வதேச அரசு தமக்குச் சாதகமாக செயற்படும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் ஆனால் நிலைமை அவ்வாறில்லை.

ஒவ்வொரு சர்வதேச காய்நகர்த்தல்களும் தமது சொந்த தேவை கருதியே செயற்படுகின்றன. இவற்றை புரிந்துகொள்ளாத இலங்கையரசு மீண்டும் தமிழ் மக்கள் மீது தமது தீவிரவாத நடவடிக்கைகளை கட்டவீழ்த்துள்ளது. மீண்டும் விடுதலைப்புலிகள் வந்துவிட்டனர் என்கின்ற மாயையை சர்வதேசத்திற்கு காட்டமுயல்கின்றனர்.

முற்றாக அழிக்கப்பட்ட புலிகள் மீண்டும் வருவார்கள், தாக்குதல் நடத்துவார்கள் என்றெல்லாம் அறிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இவை சர்வதேச நாடுகள் மீண்டும் ஒரு போரை உருவாக்கி இலங்கைநாட்டை சின்னாபின்னமாக்கும் ஒரு சதித்திட்டத்தினையே இந்த நாடுகள் மேற்கொண்டுவருகின்றன.

– மறவன் –

 

 

 

SHARE