சர்வதேச சூழல் தினத்தை முன்னிட்டு கருத்துரையும், கலந்துரையாடலும்

204

சர்வதேச சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை சூழலை பாதுகாக்க எழுந்து நிற்போம் என்ற தொனிப்பொருளில் கருத்துரையும், கலந்துரையாடலும் எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் மாலை 3 மணிக்கு மாத்தளை விஹார வீதியில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சிறுவர் இல்ல மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

செ.மோகன்ராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பூமியை வாழத் தகுதியற்றதாக்கும் இலாபவெறி என்ற தலைப்பில் கருத்துரையினை மோகனதர்ஷினியும், வெலிவேறிய ரதுபஸ்வல போராட்டம் தொடக்கம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் செப்பு ஆலைக்கு எதிரான போராட்டம் வரை என்ற தலைப்பில் கருத்துரையினை டேவிட் சுரேனும் ஆற்றவுள்ளனர்.

இதேவேளை குறித்த கருத்துரையும் கலந்துரையாடலும் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

SHARE