சர்வதேச நீதிபதிகள் குறித்து ஜனாதிபதியுடன் பேசவுள்ள பான் கீ மூன்

265

 

சர்வதேச நீதிபதிகள் குறித்து ஜனாதிபதியுடன் பேசவுள்ள பான் கீ மூன்

இலங்கை வந்­த­டைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ள நிலையில் இதன்­போது பொறுப்­புக்­கூறல் விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்பு தொடர்பில் ஆரா­யப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நேற்று இலங்கை வந்­த­டைந்த ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் நேற்­று­மா­லையே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேச்சு நடத்­தி­யி­ருந்தார். அந்­த­ வ­கையில் இன்று மாலை 7 மணிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.

இதே­வேளை ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்­டுள்ள பான் கீ மூனின் பேச்­சாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளி­நாட்டு நீதி­வான்கள் தொடர்பில்
பான் கீ மூன் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவார் என்று தெரி­வித்­துள்ளார். யுத்தக் குற்றச் செயல் விசா­ரணைப் பொறி­மு­றை­மையில் வெளி­நாட்டு நீதி­வான்­களின் பங்­க­ளிப்பு குறித்தும் பேசுவார் என பான் கீ மூனின் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.

மேலும் இலங்கை மக்­க­ளுக்கு உத­வி­களை வழங்­கவே ஐக்­கிய நாடுகள் அமைப்பு விரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்ளார். அந்­த­ வ­கையில் ஜனா­தி­ப­தி­யு­ட­னான இன்­றைய சந்­திப்­பின்­போது விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு குறித்து பேசப்­படும் என்று நம்ப­ப்படு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­க­னவே எக்­கா­ரணம் கொண்டும் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­வாங்­கப்­ப­ட­மாட்­டார்கள் என திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ள நிலை­யி­லேயே இன்­றைய சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

குறிப்­பாக இலங்கை அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்­கிய ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் எவ்­வாறு உள்­ளது என்­பது குறித்தும் ஜெனிவா பிரே­ர­ணைக்கு ஏற்ப விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றதா என்­பது தொடர்­பா­கவும் அரச தரப்­பு­ட­னான பேச்­சுக்­க­ளின்­போது ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்­கத்தின் முன்­னேற்றம் குறித்து அர­சாங்க தரப்பில் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்­துக்கு விளக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை இன்று மாலை காலிக்கு விஜயம் செய்து நல்­லி­ணக்­கத்தில் இளை­ஞர்­களின் பங்­க­ளிப்பு என்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் உரை­யாற்­ற­வுள்ளார்.

இது இவ்­வாறு இருக்க நாளை வெள்ளிக்­கி­ழமை காலை யாழ்ப்­பாணம் செல்லும் பான் கீ மூன் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள், வடக்கு முதல்வர் விக்­னேஸ்­வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார். விசே­ட­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்பில் ஆரா­யப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

யாழில் சந்­திப்­புக்­களை முடித்­து­விட்டு கொழும்பு திரும்பும் பான் கீ மூன் மாலை கொழும்பில் உள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து இலங்கை விஜயம் தொடர்­பாக விளக்­க­ம­ளிப்பார்.
ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­த­துடன் சில தினங்­களில் இலங்­கைக்கு விஜயம் செய்து நிலை­மை­களை அவ­தா­னித்­தி­ருந்தார். இதன்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் ஐ.நா. செயலர் பான் கீ மூனும் இணைந்து கூட்­ட­றிக்கை ஒன்றை விடுத்­தி­ருந்­தனர்.
மேலும் 2015 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்­பாக அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வந்து நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அந்தப் பிரே­ர­ணையில் விசா­ரணைப் பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இடம்­பெ­ற­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யிலேயே
பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

 

SHARE