சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் தாய்லாந்தில் கைது- பொலிஸ்

157

 

சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, இலங்கை பொலிஸாரினாலும் தேடப்பட்டு வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிய பெரேரா தாய்லாந்தில் வைத்து இன்டர்போல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பெங்கோக் நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE