காணாமல்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி கையெழுத்திட்டு சர்வதேச விசாரணையை வலுப்படுத்தும் முகமாக இன்று வியாழக்கிழமை (10) கையெழுத்து வேட்டை மன்னாரில் நடைபெற்றது.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பெறுப்புகூறல் பொறிமுறைகள் தமிழர் செயற்பாட்டு குழு ஆகியன இணைந்து சர்வதேச விசாரணையை வலுப்படுத்தும் முகமாக கையெழுத்து பெறும் நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தது
இன்று காலை 10 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து சென்ற உறவுகளை இழந்தவர்களின் உறவினர்கள் மன்னார் மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வீதிக்கு அருகில் நின்று காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதில் இலங்கை அரசின் உள்ளக
பொறிமுறையிலான விசாரணையில் நம்பிக்கை இல்லை என தெரிவித்து சர்வதேச விசாரணையைகோரி கையெழுத்துபெறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் முதல் கையெழத்தினை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி.இ.செபமாலை ஈட்டு கையெழத்து பெறும் நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமழ் தேசிய முன்னனியின் தலைவர் கஜேந்திர குமார், வட மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன், மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க், அதன் உத்தியோகஸ்தர்களான அ.சாகாயம். மார்ட்டீன் மாஸ்டர்,தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் சிவகரன்,காணாமல்போனவர்களின் உறவினர்கன் மற்றும் சமூகஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு கையெழுத்தினை பதிவுசெய்தனர்.
கையெழுத்து பதிவுகள் இன்று மாலை 3 மணிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.