தாயகத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் நடைபயணம் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது.
கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன் ஆரம்பமான இந்த நடை பயணம் காலை 9 மணியளவில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளும் நடை பயணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கலந்து கொண்டார்.
இவர்களுடன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், காணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.