இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு விடயம் தான் இந்த சர்வதேச விசாரணை, உள்ளக விசாரணை என்பது. ஜெனிவாவிலே அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பல்வேறு நாட்டவர்களும் அங்கு வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள். இந் நிலையிலே முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் வடமாகணசபையினுடைய உறுப்பினருமாக இருக்கக் கூடிய கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் உடனான நேர்காணல்
கேள்வி:- இன்று மிகவு ஒரு இக்கட்டான ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கின்றது அந்தவகையிலே சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது அதேநேரம் உள்ளக விசாரணை என்பது பிறைசூடிப் போனதாகவே காணப்படுகின்றது. இன்று இந்த சர்வதேச விசாரணைக்காக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் மற்றவர்களும் அங்கு சென்றிருக்கின்றார்கள். அந்த வகையிலே நீக்களொரு வடமாகணசபையிலே பிரதிபலிக்கின்றவராக இருக்கின்ற வகையில் இந்த சர்வதேச விசாரணை என்பது எந்தளவில் ஒரு சாத்தியமான தன்மையை உருவாக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
பதில்:- முதலாவது விடயம் ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனிதஉரிமைப் பேரவை பரிந்துரைத்திருக்கின்ற விடயம் சர்வதேச விசாணையென்பது சர்வதேச நீதிபதிகள், வக்கில்கள், விசாரணையாளர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த நீதிபதிகள், வக்கில்கள், விசாணையாளர்களைக் கொண்ட ஒரு கலப்பான விசாரணைப் பொறிமுறையே இந்த அறிக்கை பரிந்துரை செய்திருக்கின்றது. ஆனால் இது தொடர்பாக மறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றது. ஒன்று இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அவை எந்தவிதமான வெளியீட்டு தலையீட்டையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆவர்கள் முழுக்க முழுக்க ஒரு உள்ளக விசாரணைப் பொறுமுறை ஒன்றை முன்வைக்கவே விரும்புகின்றார்கள். அதை உலகம் ஏற்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். அந்த வகையில் திரு மக்களசமரவீர வெளிவிவகார அமைச்சருடைய ஐநாசபை உரை அமைந்திருந்தது. உலகம் தங்களை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக தாங்கள் எந்தகைய வழிமுறைகளிலும் உள்ளக விசாரணைகளை நடத்த இருக்கின்றோம் என்று ஒரு வடிவத்தை அவர் கொடுத்திருந்தார். அந்த வடிவம் தொடர்பாக எங்களுக்கு ஒரு முழுமையான விமர்சனம் ஒன்று ஆகவே எங்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல கூறுகின்ற போது அல்லது ஒரு பார்வைக்கு சொல்கின்ற போது அது எங்களைப் பொறுத்தவரைக்கும் இனிப்புப் பூசப்பட்ட ஒரு கசப்பான கருத்தாகவே அதைப் பார்க்கின்றோம். இரண்டாவது சர்வதேச விசாரணை என்பதுதான் தமிழ் மக்களுடைய இதுவரை நடைபெற்ற யுத்தக் குற்றங்களையும், கடுமையான மனித உரிமை மீறள்களையும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களையும் முழுமையாக வெளிக்கொனர உதவும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரைக்கும் கடந்த அறுபது ஆண்டு காலமாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விசாரணைக் கமிஷன்கள் தமிழ் மக்களுடைய பிரச்சனை தொடர்பாக அல்லது தமிழ் மக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சில விசாரணைக் கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. மக்கள் காணமல் போதல் தொடர்பான விசாரணைக் கமிஷன்கள் வந்தன. இந்த விசாரணைக் கமிஷன்கள் எதுவேமே சிறியதொரு மாற்றத்தையும் தமிழ் மக்களுக்கு அவர்கள் கொடுக்கவில்லை. எந்தவொரு தீர்வினைக்கூட அவர்கள் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. பல கமிஷன்கள், ஆணைக்குழுக்கள் இது தொடர்பாக போடப்பட்டன இவையெல்லாம் காலங்களைக் கடத்தி தமிழ் மக்களை விரத்தியடையச் செய்து, அவர்களை ஏமாற்றி அவர்களை வேறு வேறு பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லத் தான் இவையெல்லாம் பயன்படுத்தப்பட்டவையே தவிர தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இதற்குக் காரணம் இலங்கை அரசாங்கம், இலங்கை அரசு, அல்லது அரசு இயந்திரம் என்பது இன ஒடுக்குமுறை என்கின்ற எல்லாவகையான வடிவங்களிலும் உள்ள ஒடுக்குமுறைகளை அரசாங்கம் விரும்பியே திட்டமிட்டுச் செய்தது என்பதனால். அவர்கள் அதற்கான நீதியை உண்மையாகத் தேடவில்லை. உலகத்திற்கு தாங்கள் நீதிக்காக நீதியை வழங்குகின்றோம் என்பதை காட்டுவதற்காகவே அவற்றை அவர்கள் செய்தார்கள் என்பதனால் தான் இதுவரை அது நடக்கவில்லை. இதை சர்வதேசமும் தெளிவாக புரிந்துகொண்டிருக்கின்றது என்பதனால் தான் இன்றைக்கு இந்த பரிந்துரை கொடுக்கின்றபோது இலங்கையின் உள்ளகப் பொறிமுறையினூடாகச் செய்யுமாறு கூறாமல் சர்வதேச பொறுமுறையின் நீதிபதிகள், வக்கில்கள், விசாரணையாளர்களையும் இணைத்துச் செய்யவேண்டும் என்று ஐநாசபை கூறியிருக்கின்றது என்றால் காரணம் இலங்கை தனியாக அதைச் செய்கின்ற வல்லமை, ஆற்றல், விருப்பம் கொண்டதாக இல்லை. கடந்த காலங்களில் அது எவ்வளவு தவறுகளை விட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் உள்ளகமாக செய்யக்கூடிய ஒவ்வொரு விடயங்களிலும் அது தோல்வியைக் கண்டிருக்கின்றது. என்பதனால் தான் இன்று கலப்பு என்கின்ற விடயத்தை அதாவது சர்வதேசத்தை இணைத்த வகையிலான ஒரு விடயத்தை ஐநாசபை பரிந்துரைந்திருக்கின்றது.
கேள்வி:- குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் இந்த சர்வதேச விசாரணை அதாவது ஜெனோசைட் என்று சொல்லப்படுகின்ற விடயத்திலே அதாவது இனப்படுகொலை என்கின்றதில் என்னென்ன விசயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் மக்கள் மத்தியிலே அது தெளிவான ஒரு விளக்கமாக இல்லை. என்ன நடத்தது, எப்படி நடந்தது, இனம் அழிக்கப்படல், ஒழிக்கப்படல் என்பது எந்த வகையிலே என்பது பற்றி மக்களுக்கு சற்று விளக்கமளிக்க வேண்டும்.
பதில்:- நான் முதல் கூறவந்த விடயத்தை முடித்துவிட்டு அதாவது எந்தளவுக்கு சர்வதேச விசாரணை சாந்தியம் என்றதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு அது தொடர்பாகக் கூறுகின்றேன். அதாவது சர்வதேச விசாரணை என்பது எங்களைப் பொறுத்தவரைக்கும் சர்வதேச உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது அது தோல்வியடைந்தது அவர்களுக்கு அந்த கப்பசிட்டி இல்லை என்பதனை சர்வதேசம் புரிந்து கொண்டமையினால் தான் இன்றைக்கு கலப்பு முறையிலான ஒரு நீதி விசாரணையை பரிந்துரை செய்திருக்கின்றது.
அதே அடிப்படையில் தான் நாங்கள் சொல்கின்றோம் கலப்பு என்று கூறப்படுகின்ற இங்கு உள்ளகமாக இருக்கக் கூடிய இந்த முறையில் இவர்களால் போடப்படுகின்ற நீதிபதிகளாக இருந்தாலும் சரி, வக்கில்கள், விசாரணையாளர்கராக இருந்தாலும் சரி இவர்கள் வந்து அரசாங்கம் ஏற்கனவே தெளிவாக பலமுறை ஜனாதிபதி உற்பட பல்வேறு அமைச்சர்களும் சொல்லியிருக்கின்றார்கள் நாங்கள் வந்து ராஜபக்ஷவைக் காட்டிக் கொடுக்க மாட்டோம், அவர்தான் இந்த போரை வெற்றி கொள்வதற்கு உதவி செய்தவர். இராணுவத்தைக் காட்டிக் கொடுக்க மாட்டோம், வெளிநாட்டு தலையீடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
என்று பல்வேறுபட்ட விடயங்களை தெளிவாகக் கூறியிருக்கின்ற பட்ச்சத்தில் இவர்களால் நியமிக்கப்படுகின்ற நீதிபதிகளோ, வக்கில்களோ, விசாரணையாளர்களோ எந்தளவிற்கு உண்மையை வெளிக்கொண்டுவர உதவுவார்களா அல்லது முடிமறைக்க உதவுவார்களா என்பது இங்கு தெளிவான விடயம். இவர்கள் முடிமறைக்கத்தான் முனைவார்கள். ஆகவே தமிழ் மக்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக கஷ்டப்பட்டுக் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானமானம் நிறைவேற்றப்பட் ஒரு விசாரணை அறிக்கை இப்படி வந்திருக்கின்றது. அந்த விசாரணை அறிக்கையின் மூலமாக அவர்களுடைய பரிந்துரைகள் மக்களுக்கு உண்மையான நீதியைக் கொடுக்கவேண்டும் என்று சொன்னால் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் கொடுக்கவேண்டும் என்று அது முழுக்க முழுக்க ஒரு சர்வதேச விசாரணையாக அமைந்தால் மட்டுமேயானால் தான் அது சாத்தியம். உள்ளகப் பொறிமுறையை கலக்கின்ற போது அதுவே ஆதாவது உண்மைகளை மூடி மறைப்பதற்கு அல்லது அதனுடைய தாற்பரியத்தைக் குறைப்பதற்கு, வலுவிளக்கச் செய்வதற்கு அது உதவும் என்கின்ற ஒரு நிலைமை இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் சர்வதேச விசாரணை ஒன்று தேவை .
என்று நாங்கள் சொல்கின்றோம். இங்கு சர்வதேச விசாரணை சாத்தியமாக? இல்லையா? என்று கேட்டீர்கள் என்றால் சாத்தியம் இல்லை என்று எதுவும் கிடையாது. இலங்கை வந்து கடந்த அறுபது ஆண்டு காலத்திலே இன்றைக்கு மங்களசமரவீர ஐநாசபையிலே சொல்லியிருக்கின்றார் கடந்த காலங்களிலே நாங்கள் தோற்றிருக்கின்றோம். இனியும் நாங்கள் தோற்க முடியாது அதாவது இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக் பல்வேறுபட்ட விடயங்களிளும் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் தோல்வியிலேதான் முடிந்திருக்கின்றது. இவ்வாறு தொடர்ச்சியாக நாங்கள் தோற்றிருக்கின்றோம் ஆகவே இனியும் நாங்கள் தோற்க மாட்டோம் எங்களுக்கொரு சந்தர்ப்பம் தாருங்கள் என்றவாறு சொல்லியிருக்கின்றார்.
ஆகவே இவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்துக் கொடுத்து அறுபது ஆண்டுகாலத்திலிருந்து நாங்கள் ஏமாற்றுப்பட்டும், தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வரலாறு எங்களுக்குத் தேவையா? ஆகவே இதை வந்து உலகம் இன்று புரிந்து கொண்டிருக்கின்ற நிலையில் என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமுறை குறிப்பாக வந்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் இன்றைக்கு எதிர்கட்சி தலைவராக எல்லோரையும் சந்திக்கக் கூடிய வல்லமையுடையவராக அவர் இருக்கின்றார். எனவே அவர் இந்த விடயங்களை எடுத்துச் செல்லவேண்டும். ஒரு முழுமையான சர்வதேச விசாரணை தான் இதற்குத் தேவையென்ற அந்த நியாயத்தை அவர் தெளிவுபடுத்தி அதனை ஏற்றுக் கொள்ள வைக்கின்ற முயற்சியை அவர் செய்யவேண்டும்.
அது சிலவேலை பிழைத்துப் போகலாம். ஆனால் அந்த முயற்சியை கண்டிப்பாக ஈடுபாட்டுடன் அச் சேவையை செய்வதற்கான முயற்சியை அவர் எடுக்கவேண்டும் என்பது தான் முழு நிலைப்பாடு. சிலவேளை அது அப்படி இல்லாமல் போனால் கூட ஒரு கலப்பு என்று வந்தால் கூட அந்தக் கலப்பு என்பதில் சர்வதேச நீதியாளர்கள், வக்கில்கள், விசாரணையாளர்கள் என்பவர்களது பங்கு என்பது 50 வீதத்திற்கு மேலானதாக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஐம்பதுக்கு ஐம்பது என்பது கூட கடினமான ஒரு விடயம் 50 வீதத்திற்கு மேலாக சர்வதேச நீதித்துறையினரும், அதற்கு குறைவாகவே உலக நீதித்துறையினரும் அமைகின்ற முறையிலாவது அது மாற்றப்படவேண்டும
அவ்வாறு இருக்கின்ற பட்சத்தில் ஓரளவிற்கேனும் நாங்கள் நீதியை எதிர்பார்க்க முடியும்.
இரண்டாவது விடயம் நீங்கள் கேட்ட ஜெனோசைட் என்கின்ற விடயம். அதாவது இனப்படுகொலை.
இனப்படுகொலை என்பதற்கு ஐநாசபையினுடைய 1956ம் ஆண்டுக்கான சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது
01. ஒரு கட்டுக்கோப்புடன் கட்டமைப்புடன் வாழ்கின்ற ஒரு சமூகத்தை சிதறடித்து சின்னா பின்னமாக்குவது, அவர்களை அகதிகளாக்கி ஓட ஓட விரட்டுவது.
02. ஒரு சமூகத்தை அழிக்கின்ற நோக்குடன் செயற்படுவது.
03. ஒருவருடைய அடையாளத்தை மாற்ற முனைவது. அதாவது சிறுவர்களை வந்து மதம் மாற்றுவது, அவர்களுடைய மொழியை மாற்றி வேறு அடையாளத்தைக் கொடுப்பது.
04. குறிப்பிட்ட இனத்தினுடைய பெண்களுடைய இனவிருத்தியை இல்லாமல் செய்வது போன்ற விடயங்கள் உட்பட சில விடயங்களைச் சொல்லியிருக்கின்றது.
ஆகவே ஒரு இனத்தை அழிப்பதற்கு இங்கு சொல்லப்பட்ட விடயங்கள் இதிலே முன்னுதாரமானக இருக்கின்றது.
இனப்படுகொலை என்பதற்கு ஐநாசபையால் கொடுக்கக் கூடிய ஐந்து விடயங்கள்.
1. ஒரு மக்கள் குழு அல்லது ஒரு மக்களினுடைய இனக் குழுவினுடைய உறுப்பினர்களைக் கொலை செய்தல்.
2. ஒரு இனக்குழுவினுடைய உறுப்பினர்களை அவர்களது உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ தாக்குதல், அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல்.
3. ஒரு இனக்குழுவினுடைய இருப்பை முழுமையாகவோ, பகுதியாகவோ அழிப்பது. அழிப்பதை நோக்கமாகக் கொண்டு அதாவது அவர்களது வாழ்நிலையை சிதறடிப்பது.
4. ஒரு இனக்குழுவினுடைய குழந்தைப் பிறப்பை திட்டமிட்டு அதை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுதல். அதாவது இனப்பெருக்கத்தை தடுப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுவது.
5. ஒரு இனத்தினுடைய சிறுவர்களை இன்னொரு இனத்திற்குரிய அடையாளத்திற்குரியவர்களாக கட்டாயப்படுத்தி மாற்றுவது. (மாதம், மொழி மாற்றுவது)
இந்த ஐந்து விடயங்களில் ஏதாவது ஒன்று செய்யப்பட்டால் அது இன ஒழிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும். அந்த வகையில் நீங்கள் பார்க்கின்ற பொழுது ஒரு இனத்தினுடைய உறுப்பினர்கள் என்பவர்களை கொல்லுதல் என்பதிலே இலங்கைத் தமிழ் மக்களினுடைய உறுப்பினர்கள் தமிழ் மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எவ்வளவு தடவை எத்தனை வகையாக எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதில் கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு விதம் விதமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நேரடியாக தனியாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். வீதியிலே தனியாக வந்தவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், கூட்டமாக கொல்லப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த ஜெனோசைட் அதாவது இனப்படுகொலை என்பதற்கு தேவையான மேலதிகமான ஆதாரங்கள் இருக்கின்றது.
உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ தாக்குதல்களையும், தாக்கங்களையும் அந்த இனக்குழு உறுப்பினர்களுக்குக் கொடுத்தல். இதுவும் மிகவும் போதியளவிற்கு ஆதாரங்களுடன் உள்ள விடயம்.
13.11.2015
இலங்கையிலே வடக்கு கிழக்கு பகுதியிலே எத்தனையோ தடவைகள் விரட்டியடிக்கப்பட்டு சொத்துக்களை, வாழ்விடங்களை இழந்திருக்கின்றார்கள். அவர்களுடைய சமூக கட்டமைப்புக்கள் குழைக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு இன்று அநாதரவாக விடப்பட்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் வைத்து இது ஒரு இனப்படுகொலை என்பதற்கு போதியளவு ஆதாரங்கலாக இருக்கின்ற விடயங்கள்.
ஆகவே இந்த இனப்படுகொலை என்பது ஒரு இனத்தை அழிப்பதற்கான நான் மேலே குறிப்பிட்டது போன்ற ஐந்து வகையான நடவடிக்கைகளின் ஊடாகவும், இனத்தை அழிப்பதற்கு பல்வேறு நாடுகள் சேர்ந்து செயற்பட்டிருக்கின்றன, இவற்றை வைத்துக் கொண்டு தான் இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை மட்டும் தான் என்று சொல்லமுடியாது இவை தவிரவும் புதிய புதிய வழிமுறைகளின் ஊடாகவும் அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றன.
அவற்றை பல்வேறு நாடுகளும், பல்வேறு அறிஞர்களும் சுற்றிக்காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஐந்து விடயங்களையும் தவிர புதிய விடயங்களையும் கையாளுகின்றார்கள் அது எதிர்காலத்திலே வரவேற்கத்தக்கதொரு விடயம் ஆகவே இனப்படுகொலைதான் இலங்கையில் நடைபெற்றது என்பதை வடக்கு மாகாணசபை இவற்றைத் தெளிவாகத் தெரிவித்துக் கொண்டு இதன் அடிப்படையில் அதற்கான விளங்கங்களையும் ஆதாரங்களையும் கொடுத்துத் தான் சபையிலே அதை நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம்.
அதனை இன்றைக்கு நாடு கடந்த தமிழீழ அரசும், புலம்பெயர் அமைப்புக்களும் சேர்ந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை தமிழ் மக்களிடம் பெற்று இந்த வடக்குமாகாணசபையினுடைய தீர்மானத்தை ஐநாபை விசாரணையொன்றை மேற்கொள்ளவேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதையும் நான் இங்கே சுற்றிக்காட்ட விரும்புகின்றேன்.
கேள்வி:- அதாவது இங்கு நீங்கள் கூறிய விடயங்களில் சர்வதேச மட்டத்திலே இதைக் கொண்டு செல்பவராயின் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் தான் , இன்று வடமாகாணசபையினை எடுத்துக் கொண்டாலும், கூட்டமைப்பினை எடுத்துக் கொண்டாலும் சரி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆகவே அவர்கள் தீர்மானிக்கின்ற சில கருத்தின்படி தான் சில நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஒருவர் கூறுகின்றார் உள்ளக விசாரணையென்று, மற்றவர் கூறுகின்றார் சர்வதேச விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று. வெறொரு பொறிமுறை வைக்கப்பட்டிருக்கின்றது அதனூடாக செய்வம் என்று கூறிகின்றார்கள். இப்படி நாங்கள் ஒருவருக்கொருவரை ஒரு கட்சியிலிருந்த முரண்பட்ட கருத்துக்களைச் கூறிக்கொண்டிருக்கின்ற பொழுது அது தமிழ் மக்களடைய அடுத்த கட்ட நகர்வுக்கு ஒரு பாதகமான தன்மையைத் தோற்றுவிக்குமல்லவா?
பதில்:- முதலாவது விடயம் ஒரு கட்சிக்கு பல கடமைகள் இருக்கின்றது.முக்கியமான கடமை மக்களுக்குச் சில குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவைக் கொடுத்தல் . அந்த வகையில் பார்த்தால் இன்றைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய முக்கிய தலைவர்கள் இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைக் கூறுவதும், பத்திரிகைகளிலே மாறுபட்ட கருத்துக்கள் வெளிவருவதும் மக்கள் இதனால் குழப்பமடைந்திருக்கிறது உண்மை. அதாவது இன்றைக்கு நடந்திருக்கக் கூடிய ஐநாசபையினுடைய மனிதஉரிமைப் பேரவையினால் கடந்த வருடம் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழு இலங்கையிலே யுத்தக்குற்றம் நடைபெற்றது மனிதஉரிமை மீறல், மனித உரிமைக்கு எதிரான குற்றம் உட்பட இவை தொடர்பான ஏனைய குற்றங்களையும் அது விசாரித்து ஒரு அறிக்கையினை வெளியிட்டிருக்கின்றது. இது இலங்கையிலே நடைபெற்ற யுத்தக்குற்றங்கள், மனித குலத்திற்க எதிரான குற்றங்கள், மனிதஉரிமை மீறள்கள் உட்பட இவை தொடர்பான ஏனைய குற்றங்கள் என்று சொல்லப்படுகின்ற போது அது ஜெனோசைட்டாக இருக்கலாம் ஏனைய குற்றங்களை உள்ளடக்கிய ஒரு விசாரணை அறிக்கை. ஒரு ஆணைக்குழுவினுடைய விசாரணை அறிக்கையென்பது ஒரு குறிப்பிட்ட விடையம் தொடர்பான விசாரணையினுடைய ஆரம்பம். அது முடிவல்ல. ஒரு ஆணைக்குழு விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கின்ற போது அந்த அறிக்கையை பொதுவாக ஒரு நாட்டினுடைய தலைவர் ஒரு ஆணைக்குழுவை நியமிப்பாராக இருந்தால் அந்த அறிக்கையை பிரதமரிடமோ, ஜனாதிபதியிடமோ கையளிக்கின்ற பொழுது அந்த அறிக்கையை நீதி மன்றத்திற்கு சமர்ப்பித்து அதற்கான நீதி விசாரணையை மேற்கொள்வதுக்கு பணிப்பார் பணிக்கப்படவேண்டும் அது தான் முறை. ஆகவே இங்கே ஆணைக்குழு விசாரணை என்பது ஒரு விசாரணையின் ஆரம்பமே தவிர அது முடிவல்ல. ஆகவே இன்றைக்கு ஐக்கியநாடுகள் சபையினுடைய மனிதஉரிமைப் பேரவை இதை நடத்திமுடித்து வெளியிட்டிருக்கின்ற அறிக்கையென்பது சர்வதேச விசாரணை ஆணைக்குழுவினுடைய அறிக்கை. இந்த அறிக்கை தொன்னூறு குற்றச்சாட்டுக்களை, தொன்னூறு வகையான குற்றங்களை சுற்றிக்காட்டி இத்தகைய குற்றங்கள் எல்லாம் இங்கு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்பதை அது பல்வேறு வகையாக தெளிவுபடுத்தியிருக்கின்றது. இதன் அடிப்படையிலே இன்றைக்கு ஒரு சர்வதேச நீதி விசாரணை நடத்தப்படவேண்டிய தேவையிருக்கின்றது. இதைத் தான் நாங்கள் இன்று சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நாங்கள் சொல்லுகின்றதன் அர்த்தம் இதுதான். ஆனால் ஒரு சிலர் தவராக கூறுகின்றனர் இந்த ஆணைக்குழு விசாரணைதான் சர்வதேச விசாரணை அதோடு அது முடிந்துவிட்டது என்று கூறுவது அது மக்களை தவறாக வழிநடத்துகின்ற ஒரு விடயம்.
முதல் கட்டம் தான் ஆனைக்குழு விசாரணை அதனுடைய விசாரணை அறிக்கை வந்திருக்கின்றது. அடுத்த கட்டம் சர்வதேச நீதி விசாரணை அந்த நீதி விசாரணை என்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்படலாம் அல்லது ஒரு தீர்ப்பாகி மூலம் நடத்தப்படலாம், அல்லது அதற்கென அமைக்கப்பட்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஊடாக நடத்தப்படலாம். இன்று ஐநாசபையினுடைய மனித உரிமைப் பேரவை பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு விடயம் சர்வதேச நீதிபதிகள், சர்வதேச வக்கில்கள், சர்வதேச விசாரணையாளர்கள் அவர்களுடன் சேர்ந்து உள்ளுர் நீதிபதிகள், வக்கில்கள், விசாரணையாளர்கள் கொண்ட ஒரு கலப்பு நீதி விசாரணைக் குழுவை அவர்கள் பரிந்துரைத்திருக்கின்றார்கள். ஆனால் அத்தகைய நீதிவிசாரணைக் குழு என்பது யார் தீர்மானிப்பார்கள் அதாவது இவர்களைத் தெரிவு செய்வத யார்? இலங்கை அரசாங்கமே தெரிவு செய்யுமா? என்கின்ற பல கேள்விகள் தொக்கிநிக்கின்றன இதற்கான உறுப்பினர்களை இந்த சர்வதேச விசாரணை நீதிபதிகள் வக்கில்கள் விசாரணையாளர்களாக இருக்கலாம், குழுவிசாரணையாளர்களாகவும் இருக்கலாம் இவர்களை யார் தீர்மானிப்பது? இலங்கை அரசாங்கம் தீர்மானிக்குமா? அல்லது ஐநாசபையினுடைய மனிதஉரிமைப் பேரவை தீர்மானிக்குமா? வேறுயாராவது தீர்மானிப்பார்களா என்பது பற்றித் தெரியாது. அரசாங்கம் தீர்மானிப்பது என்பது சரியாக இருக்காது. ஏனென்று சொன்னால் இலங்கை அரசாங்கம் இத்தகையதொரு பொறிமுறைக்கு விருப்பமின்மை இல்லையென்பதை பகிரங்கமாக பல்வேறு முறையில் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. இன்று வரைக்கும் அது தெரிவித்துக்கொண்டிருக்கின்றது. ஆகவே எங்களைப் பொறுத்தவரைக்கும் அத்தகையதொரு இடத்தில் ஐநாசபையினுடைய மனிதஉரிமைப் பேரவை தான் சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யவேண்டிய தேவையிருக்கின்றது.
கேள்வி:- அதாவது இன்று மக்களுடைய கருத்துக்களின் படி மக்கள் பல்வேறு கருத்துக்களை நாங்கள் கிராமங்களில் நேரடியாகச் சென்று கதைத்தபோது கூட பல்வேறு கருத்துக்களைக் சர்வதேச பொறிமுறை விசாரணை தொடர்பாக கூறியிருக்கின்றார்கள். இன்று எதிர்க்கட்சி பதவியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கியதன் ஊடாக அவர்களை உள்ளுரிலேயே விசாரணைகளை முடிப்பதற்கான ஒரு பின்னணி திட்டமாகத் தான் இது அமைந்திருக்கின்றது எனவும் ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை வைத்தே இந்தப் பிரச்சணைக்கு இது இனப்படுகொலை இல்லை எனத் தீர்மானம் எடுத்து உள்ளுரிலே பிரச்சனை நடந்தது உள்ளுரிலே இராணுவத்துக்குத் தண்டணையைக் கொடுத்து இப் பிரச்சனையை முடித்துவிடுவோம் என்றொரு நிலமை மக்களிடையே நிலவுகின்றது அதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- யுத்தக்குற்றங்கள், மனிதாபிமான சட்டங்கள் இந்த எதிர்க்கட்சிப் பதவியை கொடுத்திருக்கின்றார்கள் அல்லது அப்படி நியமித்திருக்கின்றார்கள் என்று சொல்லுவது வந்து ஒரு வகையிலே ஏதோ அவர்கள் தங்களுடைய தங்களுக்குரிய ஒரு பதவியை அல்லது வேறு ஒருவருக்குக் கொடுக்கவேண்டிய ஒரு பதவியை தங்களது விருப்பத்துக்குரிய ஒருவருக்குக் கொடுத்தது போன்று ஒரு தவறான விளக்கமாக தெரிகின்றது. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கின்றது. இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன. ஆகவே இங்கு மூன்றாவது இருப்பவர்தான் பிரதான எதிர்க்கட்சியாக வரமுடியும் அது தான் பராளுமன்ற மரபு, நடைமுறை சம்பந்தனுக்கு எதிர்க்கட்சிப் பதவி கொடுத்திருக்கின்றோம் இது வந்து எங்களுடைய இன சௌகரியத்தைக் காட்டுகின்றது என்று மக்களசமரவீர சொல்லுவது வந்து மிகவும் கேலிக்கூத்தான, தவறான ஒரு விடயம். காரணம் இது அவருக்குக் கிடைக்கவேண்டிய பதவி. இன்று இருக்கக் கூடிய முதல் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்ற போதிலும் அவை இரண்டுமே ஆளும் கட்சிகள். ஆகவே எதிர்க்கட்சி என்று சொல்கின்ற பொழுது மூன்றாவது பெரிய கட்சிதான் வரமுடியும் அது தான் சரி, நிஜயம், மரபு. ஆகவே அவர்கள் வந்து இன்னொருவருக்குக் கொடுக்கவேண்டிய தாங்களேதோ தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி இவருக்கு இரக்கத்தில் கொடுத்துவிட்டதாகவோ, அல்லது தமிழ் மக்களுக்கு சலுகை செய்ததாகவோ சித்தரிக்க முனைவது என்பது தவறான ஒரு விடயம். அது தவறானது அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. என்னைப் பொறுத்தவரையில் அது எங்களை இழிவு படுத்தும் ஒரு விடயமாகத்தான் நான் நினைக்கின்றேன். காரணம் ஜனநாயக நாடுகள் மரபு அடிப்படையில் பாரம்பரிய அடிப்படையில் தான் அது வழங்கப்பட்டிருக்கின்றது. அவர் அதற் உருத்துடையவர் இனமாகக் கொடுத்த ஒரு விடயம் அல்ல.
கேள்வி:- அது போன்று அதாவது சர்வதேச நாடுகளினுடைய உதவியுடன் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் தான் தமிழ் மக்களுடைய பிரச்சனை முடிவுக்குக் கொண்டு வந்தது இந்திய இலங்கை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. அது மட்டுமல்லாது நிறுபனமாகியிருக்கின்றது இந்திய இராணுவம் தான் சட்டலைட் தொடர்புகளைக் கொடுத்து தாக்குதல் நடத்தியிருக்கின்றது. அமெரிக்கா விடுதலைப்புலிகளுடைய எட்டு போர்க்கப்பல்களைக் காட்டிக் கொடுத்து சர்வதேசக்கடலிலே நூற்று ஐம்பது கிலோ மீற்றருக்கு அப்பால் நின்று அதைச் செயற்படுத்தி வெற்றி கரமாக முடித்திருக்கின்றது. அத்துடன் மல்ரிபரல்களை வழங்கியது இந்த சீனா அரசாங்கம் இப்படி சர்வதேச மட்டத்திலே ஆரம்பத்திலே 65 நாடுகள் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய பேச்சுக்களிலே அதற்கு அதிகாரம் கொடுத்து திம்பு முதல் டோக்கியோ வரையான பேச்சுக்களிலே பல்வேறு விடயங்கள் அடங்குகின்றது. இவ்வாறு இருக்க இன்று இந்த நான்கு நாடுகளும் முக்கிய பங்குவகிக்க காட்டுக்குள் சென்று இராணுவத்திற்கு பயிற்சிகள் வாழங்கி அவர்களுடன் செல்வது கூட வீடியோக் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த சர்வதேச விசாரணையென்பது சர்வதேசமே இணைந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிற்பாடு இதை எந்த வகையிலே நீங்கள் இவர்கள் எங்களுக்கொரு நிஜயத்தன்மையான முடிவினைக் கொடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்:- இது வந்து இரண்டு விடயங்கள் இன்றைக்கு நீங்கள் சொல்கின்ற இதே அமெரிக்கா தான் கடந்த மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் சபையிலே இலங்கைக்கு ஒரு யுத்தக் குற்றம் தொடர்பான விசாணை நடத்தவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது அத்தீர்மானத்தில் வெற்றி பெற்று அத்தகைய ஒரு விசாரணை நடத்தியும் முடித்திருக்கின்றது. அதாவது அந்த நேரத்திலே அந்த காலட்டத்திலே அப்படியொரு தேவையிருந்திருக்கலாம். ஆனால் அமெரிக்காவுக்கு இன்னொரு விடயமும் இருக்கின்றது. ஒரு தரப்பிலே இந்த மனிதஉரிமை விடயம் என்பது தங்களுடைய அரசியலுக்காக அல்லது பிராந்திய அரசியலுக்காக பயன்படுத்துவதாக இருக்கலாம். அதை வேளையில் அமெரிக்காவுக்கு உலகில் மனிதஉரிமையை பாதுகாப்பத்தில் முன்நின்று செயற்படுகின்ற நாடு என்னும் நற்பெயர் அதுக்கு உண்டு. அந்த வகையிலே இலங்கையில் வந்து கடந்த மூன்று தடவைகள் கொண்டு வந்து அதில் அவர்கள் வெற்றி பெற்று ஒரு அறிக்கையை வெளியிட்ட பின்னால் தங்களால் கடினமாக உழைத்துக் கொண்டு வந்த அறிக்கையை தாங்களே சாகடிக்க முன்வருவார்களா? அவ்வாறு அவர்கள் செய்வார்களாக இருந்தால் இன்று உலகில் அவர்க்கு இருக்கின்ற நற்பெயர் வந்து பெரியதொரு கலங்கம் ஏற்படும் காரணம் இலங்கை விஷயம் என்பது உலக அளவில் மிக உண்ணிப்பாக பார்க்கப்படுகின்ற ஒரு விடையமாகும். அமெரிக்கா இலகுவாக தன்னுடைய உழைப்பின் மூலம் கொண்டு வரப்பட்ட அந்த அறிக்கையை தானே செயலற்றதாக ஆக்கிவிடுமா? என்ற கேள்வி இருக்கின்றது. நான் நம்புகின்றேன் இன்றைக்கு வந்து கண்டிப்பாக தங்களுடைய நலன்களுக்காக சில விட்டுக்கொடுப்புகளை அவர்கள் செய்வதற்கு முன்வருவார்களே தவிர அதனை முற்று முழுதாக அழித்து விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதைவிட அவர்கள் செய்வார்களா என்பதை விட அவர்களை அவ்வாறு செய்யவிடாது நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சிந்தித்து, திட்டமிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் குறிப்பாக அந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் இது தொடர்பாக திட்டமிட்டு அடுத்த இருவாரங்களுக்குள் அமெரிக்காவுடன், அதனுடைய முக்கியஸ்தருடன் கதைத்து வரக்கூடிய தீர்மானம் .