சர்வதேச விடுதலைப்புலிகளின் கைதுகளும், அதன் பின்னணியும்

635

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை பொறுத்தவரையில், உலகளாவிய ரீதியில் தமது வலைப்பின்னல்களை 1995ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வலுப்படுத்திக்கொண்டனர். இலங்கை இராணுவத்துடனான யுத்தத்தின் பொழுது புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொதுமக்கள் போராட்டத்திற்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்துவந்துள்ளனர்.

இவ்வாறிருக்கின்ற காலகட்டத்தில் இவர்களை இனங்கண்டுகொள்வதற்கு இலங்கையரசிற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னர், உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம் தடைசெய்யப்பட்டது. அதில் விடுதலைப்புலிகளையும் சந்திரிக்கரசு இணைத்துக்கொண்டது. காலப்போக்கில் இதற்கு முன்னர் இருந்த அரசினால் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை நெருங்க முடியாதிருந்தது.

அமெரிக்கரசு எப்போது பயங்கரவாத அமைப்புக்களை தடைசெய்ததோ அன்றிலிருந்து இன்றுவரை விடுதலைப்புலிகளின் சர்வதேச வலைப்பின்னலைச் சேர்ந்தவர்கள் பலர் கைதுசெய்யப்படுகிறார்கள். 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து வெளிநாடுகளிற்குச் சென்றவர்கள் தற்பொழுது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாளர்களாகவே செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களை கைதுசெய்யும் படியாக, இலங்கையரசு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இவர்களை முழுமையாகத் தடைசெய்தது. பின்னர் இவர்களது சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைளும் இடம்பெற்றன. இதற்கான ஆலோசனைகளை இலங்கையரசிற்கு முன்னாள் விடுதலைப்புலிகளின் வெளிவிவகாரங்களுக்குத் தொடர்பான கே.பி அவர்கள் இரகசியமான முறையில் எடுத்துரைத்தார்.

இதனையடிப்படையாகக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையாக, கடந்தவாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் மூவர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியா வில் கைதுசெய்யப்பட்டவர்கள் (26) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக மிகவும் நம்பரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக மூவரே கைதுசெய்யப்பட்டிருந்ததாக மலே சிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்திருந்தன. எனினும், மொத்தமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டிருந்ததாகவும், இவர் கள் அனைவரும் தற்போது இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் மலே சிய மனித உரிமை அமைப்பொன்றின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மலேசிய அதி காரிகள், மூவரின் பெயர் விபரங்களை மட்டுமே வெளியிட்டிருந்ததாகவும், ஏனைவர்கள் 6 பேர் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதே வேளை, மலேசிய அதிகாரிகளி னால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், ஆரம்பத்தில் இலங்கை அதிகாரிகளே, மலேசிய பொலிஸ் நிலையத்தில் இவர்களிடம் விசாரணைகளை நடத்தியதாக கைதுசெய்யப்பட்டவர்களைச் சந் தித்த சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.

பெயர், விபரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்பட்ட மூவரில் ஒருவர் ஐ.நா. அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், மற்றையவர் அகதி அந்தஸ்திற்கு விண்ணப்பித்திருந்தவர் எனவும், மூன்றாவது நபர் மலேசியாவில் உரிய வீசா அனுமதியுடன் இருந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலேசியாவில் இந்த விசேட தேடுதல் தொடரும் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், மலேசியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அலுவலகத்தில் பதிவுசெய்துகொண்டு, அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்ட சுமார் 4,500 பேர் மலேசியாவில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, மலேசியா வில் மேலும் பல இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தம க்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த விவகா ரம் தற்போது பெரும் அழுத்தத்தைத் தமக்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் மலேசியாவிலுள்ள உள்ளுர் மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்கள் ஐ.நா. அகதிகள் அந்தஸ்து அட்டையை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக மலே சிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எவ்வாறாயினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து முழுமையாக ஆராயப்படும் என மலேசியாவிற்கான ஐ.நா. அகதிகள் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க, அகதிகள் அந்தஸ்து அட்டை வழங்கப்பட்டவர்கள் குறித்து மீண்டும் விசாரணைகளை நடத்துவதற்கும், வழங்கப்பட்ட அந்தஸ்தை மீள்பரிசீலனை செய்வதற்கும் மலேசியாவிலுள்ள ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் தயா ராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

வான் படை, புலனாய்வு பிரிவு, பிரச்சார பிரிவு ஆகியவற்றை சேர்ந்த ஒவ்வொருவரே மலேசியாவின் பயங்கரவாத ஒழிப்பு விசேட பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் கடந்த 15 ஆம் திகதி சிலாங்கூர் பிரதேசத்தில் வௌ;வேறு இடங்களில் வைத்து பிடிக்கப்பட்டனர்.

புலிகளின் வான் படை ஸ்தா பகர் கேணல் சங்கர். சங்கரின் மகள் மலேசியாவில் படிக்கின்றார். சங்கரின் மகளுடைய கணவனே குசந்தன். ஆயி னும் இத்தம்பதி நான்கு வருடத்துக்கும் மேலாக பிரிந்து வாழ்கின்றனர்.

குசந்தன் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்ற விமானி. வெளிநாட்டில் இப்படிப்பை படித்தவர். புலிகளின் வான் படையை கட்டியெழுப்புகின்ற செயற்பாட்டில் ஈடுபட்ட இளைய தலைமுறையை சேர்ந்த ஒருவர். வன்னியில் புலிகளின் விமானங்கள் பறந்து திரிந்தபோது பங்களிப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவற்றை வழங்கி இருக்கின்றார். மலேசியா சென்ற பிற்பாடு இவர் மெதுமைப் போக்குடன் நடந்து இருக்கின்றார்.
ஏனைய இருவரில் ஒருவர் பொட்டம்மானின் நெருங்கிய சகா ஆவார். மற்றவர் நிதர்சனத்தில் சவுண்ட் இன்ஜினியராக வேலை பார்த்தவர். புலிகளின் சர்வதேச வலையமைப்பை சேர்ந்த இன்னும் ஏராளமா னோர் இவர்களின் கைதை தொடர்ந்து பிடிக்கப்படலாம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்டர்போலின் உதவி இலங்கையரசிற்கு மிகவும் தேவையானதொன்றாக அமைகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசானது உலகமெங்கும் வாழ்கின்ற பயங்கரவாத அமைப்புக்கள் ஒருசிலவற்றை வளர்த்தெடுப்பதற்கு பட்டியலிட்டிருக்கின்றது. அதில் லக்சரிதொய்பா, ஹமாஸ், அல்கைதா தவிர்ந்த ஏனையவற்றை மீள் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றது. காரணம் என்னவென்றால் ஆசியப்பிராந்தியத்தில் யுத்தம் ஆரம்பிக்கின்றபொழுது அந்நாட்டில் உள்ள ஆயுதக்குழு ஒன்றுடன் தொடர்புகளை வைத்திருந்தால் தன்னுடைய செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ளலாம் என்கின்ற காரணத்தினால் அமெரிக்கா தற்பொழுது ஆயுதக்குழுக்களை வளர்த்தெடுப்பதில் தீவரம் காட்டுகின்றது.

அதேநேரம் இலங்கையரசிற்கு இதனால் கிடைக்கப்போவது தீமை என்றே கூறவேண்டும். காலப்போக்கில் விடுதலைப்புலிகள் புத்துயிர்பெற்று மீண்டும் தமிழினத்துக்கான போராட்டம் உருவாவதற்கு அமெரிக்கா பின்னணியில் இருப்பது என்பது ஆபத்தானதொரு விடயமாகும். இன்று சர்வதேச நாடுகளை எடுத்துக்கொண்டால் அதிகாரமிக்க நாடாக அமெரிக்கா திகழ்கின்றது.

அபிவிருத்தியடைந்த நாடுகள் அபிவிருத்தியடையாத நாடு களை நசுக்குவது இன்று நேற்றல்ல. தொன்றுதொட்டு காணப்படுகின்றது. அதேநேரத்தில் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் காங்கிரஸ் அரசு தவறிழைத்துவிட்டு தற்பொழுது கவலைப்படுகின்றது எனலாம். ஆரம்பகட்ட விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இவர்களே செயற்பட்டுவந்தனர்.

தற்பொழுது விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தை நசுக்கு வதற்காக ஏற்படுத்தப்பட்ட விளைவு அடுத்தகட்ட ஆபத்தாக இந்தியாவிற்கு அமையப்போகின்றது. இலங்கையரசினை வளர்க்கின்றதா அல்லது மற்றுமொரு ஆயுதப்போராட்டத்திற்கு கொண்டு செல்கின்றதா என்ற கருத்தும் ஆய்வாளர்களின் மத்தியில் எழுகின்றது. அண்மைக்காலத்தில் நடைபெற்ற கோபி, அப்பன், தேவிகன் என்ற மூவர் ஒட்டுசுட்டான் வெடிவைத்தகல்லு என்ற இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமையானது இலங்கை யரசினால் நடத்தப்பட்ட ஒரு நாடகமே எனவும் கூறப்படுகின்றது.

அமெரிக்கரசினைப் பொறுத்த வரையில் அதனுடைய ஊஐயு இரு விடயங்களைச் செய்கின்றது. ஒன்று இராணுவத்தினருக்கும், இலங்கையரசிற்கும் ஆதர வினை வழங்கிக்கொண்டும், விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் ஒருசிலரை கைதுசெய்வதற்கும் உதவிகளை மேற்கொண்டும், விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை மீண்டும் வளர்த்துவருகின்றது. காரணம் என்னவென்றால் இன்று உலக அரங்கில் மாபியா என்று கூறப்படும் பாதாள அணியினர் முழுமையாக செயற்படாததன் காரணமாக அரசி யலை கொண்டுசெல்வதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

ஆகவேதான் இந்த நாடுகள் அனைத்தும் மாபியா அணியி னரை கூடுதலாக வைத்துள்ளது. மேற்குலக நாடுகளின் நயவஞ்சகமான செயற்பாடுகளை அவர்கள் மறை முகமாக வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள். இலங்கையரசினைப் பொறுத்தவரையில் அதனுடைய தார்பரியங்களை விளங்கிக்கொள்ளாது நடந்துவருகிறார்கள் என்பது நாட்டின் புலனாய்வு கட்டமைப்புக்களுக்கு குந்தகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மன், சுவிஸ், கனடா போன்ற நாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின் அமைப்பினர் தற்பொழுது அமெரிக்கரசின் உதவி யுடன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்தகட்ட நகர்வுகளை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மக்களுக்கான முழுமையான தீர்வுகள் கிடைக்கப்பெறாது போனால் இலங்கையரசு உலக நாடுகளினால், தற்பொழுது உள்ள நிலைமையை விட மோசமான நிலைமைக்குத் தள்ளப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இதில் முக்கியமாக இந்தியாவின் ரோ (CIA) CIA, CBI, ஸ்கொட்லாந்து பொலிஸ் போன்ற உலகின் முக்கியமான புலனாய்வு அமைப்புக்கள் எதோவொரு வகையில் தமது தேவைகருதி ஆயுதக்குழுக்களை வளர்த்துக்கொண்டிருக்கின்றன. அவர் கள் தேவை இல்லை என்று கருதி னால் உரிய நடவடிக்கைகளை எடுத்து உரிய அரசிடம் ஒப்படைப்பதிலும் இந்நாடுகள் தயக்கம் காட்டமாட்டாது. இதனை மக்களாகிய நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.

– சுழியோடி –

 

 

SHARE