சற்று முன்னர் ஊவா வெல்லச பல்கலையில் தமிழ் மாணவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல். 7பேர் வைத்தியசாலையில் அனுமதி.!

290

 

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில்  சிங்கள பெரும்பான்மை இன மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் இடையில் சமீப  காலமாக  கருத்து  வேறுபாடுகள் , முறுகல்  நிலை  தொடர்ந்தவண்ணம் இருந்துள்ளது. இந் நிலையில் 30/03/2016 அதாவது நேற்று இரவு 10 மணியளவில்  பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இவ் திட்டமிடப்பட்ட தாக்குதல் சம்பவம் சிங்கள மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
hqdefault
இவ் தாக்குதல் சம்பத்தினை  2ம் வருட பெரும்பான்மை இன  மாணவர்கள் 150 பேருக்கு  மேல் இணைந்து, தமிழ் மாணவர்கள் 07 பேர் மீதான கொடூர தாக்குதலாக  மேற்கொண்டுள்ளனர். இவ் கொடூர தாக்குதலில் காயமடைந்த 07 தமிழ் மாணவர்களும் தற்போது பதுள்ள பொது வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் தாக்குதலில் 2ஆம் வருட மாணவர்கள் 4 பேரும், 3 ஆம் வருட மாணவர்கள் இருவரும், இறுதியாண்டு மாணவன் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் திருகோணமலை வளாகத்திலும் இவ்வாறான சம்பவம் நடைபெற்ற போதிலும் பெரும்பான்மை மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமையே இவ்வாறன நல்லாட்சியின் நல்ல செயல்கள் தொடர காரணமாக அமைகின்றது. எனவே நல்லாட்சி அரசின் ஜனாதிபதியும் பிரதமரும், உயர் கல்வி அமைச்சர் ஊடாக  இவ் விடயத்தில் கவனம் எடுத்து ஜனாதிபதியின் நேரடி நியமனத்தில் நியமிக்கப்பட்ட துணை வேந்தரின் கண்காணிப்பில் தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பான்மை மாணவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தவறின், பெரும்பான்மை இன மாணவர்கள் சொற்ப அளவில் கல்வி பயிலும் மட்டக்களப்பு, ஒலுவில், யாழ்ப்பாண பல்கலைக்கழகங்கள் மற்றும் வவுனியா, கிளிநொச்சி வளாகங்களில் பெரும்பான்மை இன மாணவர்களின் நிலைமையும் கேள்விக்குறி  ஆகும்  சூழல் நிலவுவதாக கல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE