சவப்பெட்டியுடன் போராட்டத்தில் இறங்கிய மக்கள்

105

 

சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் உடலத்துடன் ஊர்வலமாகவந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் (03) மாலை வேளை கொக்குவில் காவல் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட கல்முனை காவல்ப் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி களவு செய்த குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சிறுவன்,

நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் படி குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

SHARE