சவுதியில் பாட்டுப் பாடிய 14 வயது சிறுவன் கைது

260

சவுதி அரேபியாவில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடுரோட்டில் நடனம் ஆடிய 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Jeddah நகரில் உள்ள போக்குவரத்துகள் அதிகம் நிறைந்த ரோட்டில் 14 வயது சிறுவன் ஒருவன், 1990 ஆம் ஆண்டில் வெளியான ஹிட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது, இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

இது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் செயலாகும் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் அபராதம் செலுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான்.

இந்த மாதம் பாடகர் ஒருவர் ரோட்டில் வைத்து கச்சேரி நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE