சவுதி அரேபிய மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 25 பேர் பலி…100க்கும் மேற்பட்டோர் காயம்!

332

 

சவுதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் காயமடைந்துள்ளதாகவும் ராணுவத்தின் தலைமை இயக்குநர் கூறினார்.

தீ விபத்தானது மருத்துவமனையில் முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் அவசர சிகிச்சை பிரிவும், குழந்தை நல பிரிவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.

SHARE