சவூதியில் தொழிலை இழந்துள்ள இலங்கையர்களுக்கு 5600 டொலர் நிதியை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

267

riyadh-saudi-arabia-cars-freeway

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அங்கு தொழில்வாய்ப்பை இழந்துள்ள இலங்கையர்களின் செலவுகளுக்காக 5600 டொலர் நிதியை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நிதியானது சவூதியில் உள்ள இலங்கை தூதுவராலயம் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் உபுல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது சவூதியில் 112 இலங்கை பணியாளர்கள் தொழிலினை இழந்துள்ளதாகவும், அவர்களுக்கான தங்குமிட வசதி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் என்பவற்றுக்கான வசதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இதில் பலருக்கு மீண்டும் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், ஏனையவர்கள் தாம் தொழில் செய்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர்களை உடனடியாக இலங்கைக்கு அழைப்பதற்கு முடியாமல் உள்ளதாகவும் உபுல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

SHARE