சாட்டி கடலுக்கு நண்பர்களுடன் சென்றவர் பலி

294
நண்பர்களுடன் புது வருடத்தை உல்லாசமாக கழிக்கும் நோக்கில் வேலணை சாட்டி கடலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் கடலில் மூழ்கி பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் வாகனம் ஒன்றில் சாட்டி கடற்கரைக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையிலலேயே யாழ்ப்பாணம் நான்காம் குறுக்கு வீதியைச் சேர்ந்த பொஸ்கோ ஸ்ரீதரன் எனப்படும் 44 வயதுடைய நபர் கடலில் மூழ்கியுள்ளார்.

விளையாட்டுக் காரணமாக நடந்த சம்பவத்தை அறியாத நண்பர்கள் கரைக்கு வந்த பின்னர் தம்முடன் கூட வந்தவரை காணவில்லையென தேடிய நிலையிலேயே குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம்போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை வேலணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Drown-at-Sea-View

SHARE