சாதனைகளைப் படைத்துள்ள சிங்கப்பூர் நீச்சல் வீரர்!

142

FINA உலகக் கிண்ண நீச்சல் போட்டிகளில் இரண்டு தேசிய சாதனைகளை சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் முறியடித்துள்ளார். இதன் மூலம் அவர் புதிய சாதனைகளுக்கு சொந்தக்காரரானார்.

(சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் 50 மீட்டருக்கான வண்ணத்துப் பூச்சி வகை நீச்சல் பிரிவில் 22.40 விநாடிகளில் நீந்தி வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

அப்பிரிவில் ரஷ்ய வீரர் விளாடிமீர் மோரோசோஃப் மற்றும் அமெரிக்க வீரர் மைக்கல் அன்ட்ரூவ் ஆகியோர் முறையே முதலிரண்டு இடங்களைப் பிடித்தனர்.

அதேபோல் 50 மீட்டருக்கான மல்லாந்து நீந்தும் நீச்சலில் ஸ்கூலிங் 24.08 விநாடிகளில் நீந்தி மற்றுமொரு சாதனையை முறியடித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்கூலிங், குறித்த புதிய சாதனைகளால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், புதிய உத்வேகத்தை தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே பல பிரிவுகளிலான நீச்சல் போட்டிகளில், ஸ்கூலிங், ரோ என் ஹோ, தியோங் ஸென் வேய், அமேன்டா லிம் ஆகியோர் அடங்கிய குழு வெள்ளிப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE