சாதாரண மனிதர்களை விட சிறந்தவர்கள்

107
அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறாதீர்கள் - சாக்‌ஷி அகர்வால்

காலா, விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். தற்போது தனியார் தொலைகாட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்‌ஷி, சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.
இவர் ஒயிட் ஷாடோஸ் நடத்திய பேஷன் ஷோவில் கலந்துக் கொண்டார். இவருடன் பிக்பாஸ் பிரபலங்கள் யாஷிகா ஆனந்த், அபிராமி, ரேஷ்மா உள்ளிட்டோரும் நடிகை மனிஷாவும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் பலரும் பங்கேற்றனர்.
அபிராமிஅதன்பின் பேசிய சாக்‌ஷி அகர்வால், ‘இந்நிகழ்ச்சியில், பங்கேற்றவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறவேண்டாம். சாதாரண மனிதர்களை விட சிறந்தவர்கள். அவர்கள் எல்லோரும் கடவுளின் குழந்தைகள். இது போன்ற நிகழ்ச்சியில் நான் எப்போதும் கலந்துக் கொள்வேன்’ என்றார்.
SHARE