தமிழரசு கட்சியானது கிழக்கை ஒரு போதும் தாரைவார்க்க மாட்டாது. தமிழரசு கட்சியானது உறுதியுள்ள காணி போன்றது என முன்னால் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமுமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கட்சியின் மறு சீராய்வும் கலந்தாய்வு கூட்டமும் இன்று திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெற்றது. எதிர்கால மாகாணசபை தேர்தலுக்கான தயார் படுத்தலுமாக தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை கருத்துக்கள் பொது மக்களிடம் கேட்டறியப்பட்டது.
இக்கூட்டம் தமிழரசு கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவர் கலாநேசன் தலைமையில் திருக்கோவில் குருகுல கட்டிடத்தில் நடைபெற்றது.
மக்கள் தமிழரசு கட்சியின் பொதுசெயலாளர் கி.துரைராஜசிங்கம் அவர்களிடம் கட்சியின் கடந்தகால நடவடிக்கைகள் எதிகால திட்டங்கள் பற்றிய கேள்விகள் தொடுக்கப்பட்டது.
இதில் எதிர்வருகின்ற மகாணசபை தேர்தல் தயார் படுத்தல் பற்றி விரிவாக பேசப்பட்டது இதன்போது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள். வட்டார ரீதியாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானிக்படும் என தீர்மானிக்கப்பட்டது.
அங்கு பதிலளித்த பொது செயலாளர் தமிழரசு கட்சியானது கிழக்கை ஒரு போதும் தாரைவார்க்க மாட்டாது. தமிழரசு கட்சியானது உறுதியுள்ள காணி போன்றது. அமைச்சும் பதவியும் காணியற்றவனுக்கு கட்டிக் கொடுக்கபடும் வீடு போன்றது. தீர்வை நோக்கிய நகர்வே நாங்கள் பங்காளி கட்சியுடன் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலமையில் கதிர்காமத்திலும், சிலாபத்திலும் தமிழர்கள் பதவி அரசியல் சலுகைகளுக்காக எமது நிலங்களை இழந்து தற்போது கந்தசாமியின் மகன் களு பண்டாவாக மாறிய நிலை இதுவே தற்காலிக சலுகை. தமிழரசு கட்சியானது உறுதி போன்ற நிதந்தர தீர்வை நோக்கியதாகவே அமையும் என்றார்.
இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சம்மாந்துறை தொகுதி தலைவர் த.கலையரசன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், பொத்துவில் தொகுதியின் தலைவர் கலாநேசன், திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.