சாந்தனுவை மீம் போட்டு கலாய்த்த கீர்த்தி

287
மாடர்ன் திருவள்ளுவர் - சாந்தனுவை மீம் போட்டு கலாய்த்த மனைவி

கீர்த்தி, சாந்தனு
தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவரும், டி.வி. தொகுப்பாளர் கீர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கீர்த்தி பகிர்ந்த மீம்இந்நிலையில், சாந்தனுவின் மனைவி கீர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். திருவள்ளுவர் போன்று நீண்ட தாடியுடன் இருக்கும் தனது கணவர் சாந்தனுவின் புகைப்படத்தை ஒப்பிட்டு போடப்பட்டுள்ள அந்த மீமில், சாந்தனுவை மாடர்ன் திருவள்ளுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE