சாந்தன் என்ற சுந்தரராஜாவை இலங்கை சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் சாத்தியமாகுமா?

216

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்று தமிழகம் வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாந்தன் என்ற சுந்தரராஜாவை இலங்கை சிறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி அதற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சாந்தன் இலங்கையை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் இலங்கை இந்திய கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இந்த விடயம் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த மாற்றல் நடவடிக்கைக்கான அனுமதி ஒப்புதலுக்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சாந்தனின் சட்டத்தரணிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சாந்தன் குறித்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டால் அதனை பற்றி சட்டத்தின் அடிப்படையில் ஆலோசனை மேற்கொள்ள முடியும் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அப்பால் மத்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் ஒப்புதலும் இதற்கு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போதும் பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின் பின்னர் 2014ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதியன்று இந்திய உயர்நீதிமன்றத்தினால் முருகன், பேரரிவாளன் உட்பட்ட வகையில் சாந்தனுக்கும் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனினும் தமிழக அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

359937-rajivweb12

perarivalan-murugan-santhan

SHARE