சாப்பிடும் போது மூச்சுத்திணறலா? முதலுதவி டிப்ஸ்

220

உணவு உட்கொள்ளும் போது, தவறான பாதையில் உணவு நுழைந்துவிட்டால் மூச்சு தடைபட்டு மூச்சுத்திணறல் உண்டாகும். கண்கள் சிவப்பாகி, காற்றை உள்ளிழுக்கும் வகையில் மூச்சை இழுப்பர்,

பெரிய அளவில் இருமல் வருவதுடன் முகம் நீலநிறமாகிவிடும்.

இவ்வாறான சமயத்தில் உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காவிட்டால் உயிரிழக்க நேரிடும்.

இதற்கு பெரும்பாலும் முதுகில் தட்டி சரிசெய்வார்கள், இது ஆபத்தில்கூட முடியலாம்.

பாதிக்கப்பட்ட நபர், மயக்கமடையாமல் இருந்து, நன்றாக பேசிக் கொண்டிருந்தார் என்றால், கீழே குனியவைத்து அதிகமாக இருமச்சொல்ல வேண்டும்.

மேல் முதுகை தட்டவேண்டும், ஐந்து முறை தட்டிய பின்னரும் சரியாகவில்லை என்றால் இதனை செய்திடுங்கள்.

ஒருவர் சாப்பிடும் போது, தொண்டையில் உணவு அடைத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டால்

அவருடைய பின்புறம் நின்று, பின்னாலிருந்து இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

அதே நிலையில் நின்று, அவருடைய விலா எலும்புகள் நடுவில் முடியும் இடத்தின் கீழே, தொப்புளுக்கு மேலே ஒரு குத்து விடுவது போல், கையை மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படியே மேல் நோக்கி வேகமாகக் கையை அழுத்தவும். விலா பகுதியைப் பிழிந்து விடாதீர்கள். கவனமாகச் செய்ய வேண்டும்.

உணவுப் பொருள் வெளியேறும் வரை இப்படி செய்யலாம். படிக்கும் போது இது எளிதாக தென்படும். தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே, எளிதாக செய்ய முடியும். இல்லையெனில், உங்கள் பின்னால் நின்று கொண்டிருப்பவரையும் சேர்த்து உதைப்பீர்கள்!

புரை ஏறிய நபர் கர்ப்பிணியாகவோ, அதிக எடை கொண்டவராகவோ இருந்தால், அவரை பின்புறத்திலிருந்து கட்டிப் பிடிக்க முடியாது. அவருடைய இரு கைகளின் கீழ் வழியே உங்கள் இரு கைகளையும் நுழைத்து, மார்புப் பகுதிக்குக் கீழ் லேசாக மேல் நோக்கி அழுத்தி, கீழிறக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு புரை ஏறும் போது செய்ய வேண்டியவை

குழந்தையின் முகத்தை மேஜை போன்ற தட்டையான பகுதியில் வைத்து, குழந்தையை மடியில் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் இரண்டு கைகளின் சுட்டு விரல் மற்றும் நடுவிரல்களை, விலா எலும்புகளுக்குக் கீழ் வைத்து, மேல் நோக்கி அழுத்துங்கள். விலா எலும்புகளை அழுத்தி விடாதீர்கள் உடைந்து விடும்.

SHARE