
ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகிய படத்தின் டிரைலருக்கு கலவையான விமர்சங்கள் கிடைத்திருந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்றை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து `அதிரூபனே’ என்று துவங்கும் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.