சாம்சுங் நிறுவனத்தின் கைப்பேசிகளிற்கு மார்க்கெட்டில் சிறந்த வரவேற்பு இருந்துகொண்டேதான் இருக்கின்றது.
காரணம் கைப்பேசிகளில் தரப்படும் புதிய தொழில்நுட்பங்கள்தான்.
அடுத்ததாக அறிமுகம் செய்யப்படவிருக்கும் Galaxy S10 கைப்பேசியிலும் பல அதிரடி தொழில்நுட்பங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 5G இணையத் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி 6.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதாக இக் கைப்பேசி வடிவமைக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர மொத்தமாக 6 கமெராக்களை உள்ளடக்கியிருக்கும் எனவும் தெரிகிறது.
இதேவேளை அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.