சின்னத்திரை மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சாய் பிரசாந்தின் தற்கொலை சம்பவம். இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து இறந்துள்ளார்.
இதுக்குறித்து அவரே ஒரு கடிதத்தில் ‘தீராத குடும்ப பிரச்சனை, மன உலைச்சலே என் தற்கொலைக்கு காரணம்’ என குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகாரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டாவது மனைவியும் இவருடன் சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்றதால் மேலும் மன உலைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளார் என கூறப்படுகின்றது. இவர் தற்கொலை குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.