சாரதிகளின் முறையற்ற செயற்பாடு!ஒன்பது மாத காலத்தில் 156 கோடி ரூபாவை அபராத பணமாக, மோட்டார் போக்குவரத்து பொலிஸார் திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

263

ஒன்பது மாத காலத்தில் 156 கோடி ரூபாவை அபராத பணமாக, மோட்டார் போக்குவரத்து பொலிஸார்  திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் சாரதிகள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டமை மற்றும் வாகன விபத்துக்கள் போன்றவற்றுக்கான அபராதம் ஊடாக 156 கோடி ரூபாவை வருமானமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் ஈட்டியுள்ளது.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதியில், மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்காக பொலிஸார் விதித்த அபராதக் கட்டணங்களின் ஊடாக 102 கோடி ரூபாவும், மோட்டார் போக்குவரத்து வீதி மீறல்களினால் தொடரப்பட்ட வழக்குகளின் ஊடாக 45 கோடி ரூபாவும், விபத்துக்களுக்கான அபராதமாக 9 கோடி ரூபாவும் திரட்டப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சினால் 2015ம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE