உலகையே திரும்பி பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லியின் இறுதி நிமிடங்களை குழந்தையின் பெற்றோர் கண்ணீருடன் விவரித்துள்ளனர்.
பிரித்தானியாவின் Bedfont பகுதியைச் சேர்ந்த தம்பதி Chris Gard(32)- Connie Yates(31)-யின் குழந்தை Charlie.
பிறக்கும் போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்ததால், மூளை மற்றும் தசை தொடர்பான விசித்திரமான நோயினால் அவதிப்பட்டுள்ளார்.
இதனால் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக, Charlie-யின் பெற்றோர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக நீதிமன்றத்தை நாடிய போதும், காலதாமதம் ஆனதால் குழந்தை உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து குழந்தைக்கு செலுத்தப்பட்ட உயிர் காக்கும் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால் Charlie உயிரிழந்தான்.
போப் பிரான்சிஸ், பிரதமர் தெரேசா மே உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிலையில் குழந்தையின் இறுதி நிமிடங்கள் குறித்து பெற்றோர் கூறுகையில், சார்லியை அழைத்துச் சென்ற ஆம்புலன்சின் பின்னால் நாங்களும் பயணித்தோம், குழந்தை அழகான Babygro நட்சத்திரம் கொண்ட உடையை அணிந்திருந்தான்.
சார்லியின் சிகிச்சைகள் நிறுத்தப்படுவதற்கு முன்பாக எங்களை கண்திறந்து பார்த்தான், அவனது இதயம் நிற்பதற்கு 12 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது, அழகாக இருந்தான் என கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.