சாவிலும் இணை பிரியாத ஐந்து தமிழ் இளைஞர்கள்! அடக்கத்திலும் ஒன்றாக

275

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நான்காம் திகதி, காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN என்னும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை நிகழ்வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாகவும் அமையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த அனர்த்தத்தில் கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

மக்கள் அதிகமாகக்கூடும் பிரித்தானிய கடற்கரைகளில் உயிர்காப்பு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்த வாதப்பிரதிவாதங்களையும் இந்தச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை இந்த இறுதிக் கிரியையில் கலந்து கொண்டு இறந்த இளைஞர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்குமாறு இறுதிக்கிரியை ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திரு ரவி நிதர்சன்

திரு ஸ்ரீஸ்கந்தராசா இந்துசன்

திரு சத்தியநாதன் கோபிகாந்தன்

திரு சத்தியநாதன் கேனுகன்

திரு ஸ்ரீதவராஜா குருசாந்த்

SHARE