சாவைக் கண்டு அஞ்சாமல் ஆடிப்பாடும் சிறுமி

152

கேன்ஸரால் பாதிக்கப்பட்டு மரணம் நெருங்கி வரும் நிலையிலும் அதைக் குறித்து சற்றும் கவலையின்றி நிகழ்ச்சி ஒன்றில் ஆடிப்பாடும் Anya Ottley (6) என்னும் சிறுமி ஒருத்தியின் வீடியோ ஒன்று மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

அவள் ஆடம்பரமாக உடை அணியவில்லை, சொல்லப்போனால் மருத்துவமனையில் நோயாளிகள் அணியும் கவுன் போன்ற உடை ஒன்றைத்தான் அணிந்திருக்கிறாள். அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ளவும் இல்லை, சிகையலங்காரம் செய்ய அவளுக்கு தலையில் முடியும் இல்லை. சிறுநீரக கேன்ஸர் நோய்க்காக 28 சுற்றுகள் கீமோதெரபி எடுத்ததில் அவளது முடியெல்லாம் கொட்டி விட்டது.

என்றாலும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவள் மைக் பிடித்து பாடி ஆட, பார்வையாளர்களுக்கு ஒரு புறமும் ஆனந்தமும் மறு புறம் அழுகையும் பீறிட்டு வருகின்றன.

பிரபல பாடகி ஒருவரைப் போல உடல் அசைவுகளுடன் அவள் பாடி ஆட, ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள் சிலரும் அவளுடைய நடனத்தில் கலந்து கொள்கின்றனர்.

பாடல் முடிந்ததும் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் காது கிழியுமளவுக்கு கரவொலியும் விசில் ஒலியும் எழுப்ப அவளோ ஒன்றுமே தெரியாதது போல அமைதியாக நிற்கும் காட்சி நெஞ்சைத் தொடுகிறது.

 

SHARE