சிகரட் வட்வரியை 90 வீதத்தால் அதிகரிக்கவும் – இளைஞர்கள் கோரிக்கை

219

அரசாங்கம் மதுபாவனை மற்றும் சிகரட் வட்வரியை 90 வீதமாக அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுசாரம் மற்றும் புகைத்தல் விளம்பரங்களை அம்பலப்படுத்தும் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுடன் கூடிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நோர்வூட் பொயிஸ்டன் தோட்டத்தில் 15-8-2016 அதாவது இன்றைய தினம் திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மது ஒழிப்பு தொடர்பிலான வீதி நாடகங்களும் இடம்பெற்றன. இதில் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சரும் கௌரவ ஜனாதிபதி அவர்களும் சிகரட் கம்பனிகளிடமிருந்து 100க்கு 90 வீதமான வரியை அறவிடப்போவதாக குறிப்பிட்டு இருந்தனர். இவர்கள் தொடர்ந்து எல்லா மேடை நிகழ்வுகளிலும் இதனைத் தெரிவித்துவந்துள்ளார்கள். கடந்தவாரம் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிக்கை தயாரித்து சமர்ப்பித்திருந்தார்கள். இதனை பாராளுமன்ற அமைச்சர்கள் அங்கீகரிக்க வில்லை எனத் தெரியவந்துள்ளது.

எனவே நாளைய தினம் ஒன்றுகூடும் அமைச்சரவையில் சிகரட் கம்பனிகளிடமிருந்து 100க்கு 90 வீதமான வரியை கட்டாயமாக அறவிடவேண்டும் என்ற முடிவு எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விழிப்புணர்வுடன் கூடிய ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் சிகரட் பாவனை அதிகமாகக் காணப்படுவதனால் அங்கு அதிகமான வரி சிகரட் கம்பனிகளிடமிருந்து அறவிடப்படுகின்றது. இதனால் சிகரட் பாவனை குறைவடையும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்ல இலங்கையில் சுகாதார அமைச்சரும், கௌரவ ஜனாதிபதியும் நல்ல நோக்கத்தோடு செயற்பட்டு வருவதனால் இந்தத் திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஏனைய அமைச்சர்கள் ஆதரவு வழங்கி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் நாளொன்று 60 வீதமானோர் போதைப்பொருள் பாவனையால் மரணமடைகின்றனர். எனவே இளைஞர்களையும், சிறுவர்களையும் காப்பாற்ற இந்த அரசாங்கம் நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

தகவலும் படங்களும் :-  நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

unnamed (1)  unnamed

unnamed (2)  unnamed (3)

SHARE