சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டி : வாகையர் பட்டத்தை வென்றது மட்டக்களப்பு இந்துக் கல்லூரி

143

 

மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான சிகரத்தை நோக்கிய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணி இந்த ஆண்டுக்கான வாகையர் பட்டத்தை வென்றுள்ளது.

இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று(30) மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணியினர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணியினர் 29 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர்.

இந்தச் சுற்றுப்போட்டிக்கான பிரதான அனுசரணையினை ஐபிசி தமிழ் வழங்கியிருந்ததுடன் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஐபிசி தமிழின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராஜன் கலந்துகொண்டார்.

SHARE