சிகிச்சை பெறும் உலகின் குண்டு பெண்ணின் எடை 100 கிலோ குறைந்தது

285

 

எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரைச் சேர்ந்தவர் இமான் அகமது. 498 கிலோ உடல் எடையுடன் இருந்தவருக்கு மும்பையில் உள்ள சைபி மருத்துவமனையில் கடந்த மாதம் எடை குறைப்பு சிகிச்சை தொடங்கப்பட்டது.

இந்த சிகிச்சையின்போது சிலமுறை அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டாலும், உடல்நிலையில் அசாதாரணமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் முபசல் லக்டாவாலா கூறும்போது, ‘‘இமான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, அவரது உடல் எடை 498 கிலோ.

திரவ உணவு மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட எடை குறைப்புக்கான சிகிச்சைக்குப் பின் 120 கிலோ எடை குறைந்துள்ளது.

இமானின் மரபணு தொடர்பான மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கை கிடைத்ததும், எந்த நேரத்திலும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். உணவு விழுங்குவதில் அவருக்கு இருந்த சிரமமும் களையப்பட்டுவிட்டது. பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தனது சொந்த காலில் எழுந்து நிற்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்தகட்டமாக 100 கிலோ வரை அவரது எடை குறைக்கப்படும்’’ என்றார் இமான் அகமது.

SHARE