சிக்கன் குறைவாக கொடுத்த பிரபல நிறுவனம் ரூ.295 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த வாடிக்கையாளர்

214

625-500-560-350-160-300-053-800-748-160-70-2

அமெரிக்காவில் தனக்கு வழங்கப்பட்ட சிக்கன் பாக்கெட்டில் குறைவான துண்டுகளை வைத்து ஏமாற்றியதாக கூறி பிரபல நிறுவனத்திற்கு எதிராக 20 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு மூதாட்டி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரபல சிக்கன் உணவு நிறுவனமான கே.எப்.சி.ல் 63 வயதான மூதாட்டி ஒருவர் 26 டொலருக்கு பக்கெட் சிக்கன் வாங்கியுள்ளார்.

வீட்டிற்கு சென்ற அவர் பக்கெட் சிக்கன் கவரை திறந்து பார்த்து விட்டு, மீண்டும் சிக்கன் வாங்கிய கடையில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கே.எப்.சி., நிறுவனம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சலுகையுடன் பக்கெட் சிக்கன் விளம்பரத்தை ஒளிபரப்பிதாகவும், அதையும் தான் நம்பி 26 டொலருக்கு சிக்கன் வாங்கியதாகவும், அதை வீட்டிற்கு சென்று திறந்து பார்த்த போது விளம்பரத்தில் உள்ளது போல அதிக எண்ணிக்கையிலான சிக்கன் துண்டுகள் இல்லாமல் குறைவாக இருந்தாகவும் கூறியுள்ளார்.

மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளான நான் பொய்யான விளம்பரங்களை கே.எப்.சி., ஒளிபரப்பிதால் தான் நஷ்டமடைந்ததாகவும், ஏமாற்றப்பட்டதாகவும் கூறி, 20 மில்லியன் டொலர் (இலங்கை ரூபாய் மதிப்பில் 295,32,00,000) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் குறித்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ள வாடிக்கையாளரை சமாதானப்படுத்தும் நோக்கில் இரண்டு பரிசு கூப்பன்களை அனுப்பி வைத்துள்ளது.

அவரோ இது எல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் தனக்கு நஷ்ட ஈடு வழங்கியே தீர வேண்டும் என்றும் அந்த கூப்பன்களை திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

SHARE