சிக்கலில் இருந்து தப்பிய தவான்!

243

இந்திய கிரிகெட் வீரர் தவான் பந்துவீச்சில் பரிசோதனை இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸை வீழ்த்த முடியாததால், இந்திய அணித்தலைவர் கோஹ்லி, தவான், முரளி விஜய், புஜாரா ஆகியோர் பகுதிநேர பந்துவீச்சாளர்களாக செயல்பட்டனர்.

இதில் தவான் வீசிய 3 ஓவர்கள், ஐசிசியின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், ன்னும் 14 நாட்களுக்குள் தவான் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் அனுப்பியது.

இந்நிலையில் ஷிகர் தவான் பந்துவீச்சு பரிசோதனைக்கு அனுப்பப்பட மாட்டார், தவான் முறையான பகுதி நேர பந்துவீச்சாளர் கூட இல்லை. அவர் பந்து வீசவில்லை என்றால் இந்திய அணி எதையும் இழந்துவிடாது.

இதனால் அவர் எதற்காக பந்துவீச்சு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இனிமேல் நடக்கும் போட்டிகளில் அவர் பந்துவீச மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE