சிக்ஸர் மழை பொழிந்து ருத்ர தாண்டவமாடிய கேப்டன் பூரன்!

123

 

International League டி20 தொடரில் பூரன் தலைமையிலான அணி, Gulf Giants அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.

பூரன் அரைசதம் விளாசல்
அபுதாபியில் நடந்த இந்தப் போட்டியில் MI Emirates அணி முதலில் ஆடியது. வில் ஸ்மீத் ஒரு ரன்னில் அவுட் ஆக, வசீம் 19 ஓட்டங்களில் முஜீப் ஓவரில் வெளியேறினார்.

பின்னர் நிதானமாக ஆடிய பிளெட்சர் 28 ஓட்டங்களில் இருந்தபோது ஓவெர்ட்டன் பந்துவீச்சில் ரிச்சர்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் MI அணி 12 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், கேப்டன் நிக்கோலஸ் பூரன் துவம்சம் செய்ய துவங்கினார். சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்ட அவர் 28 பந்துகளில் 51 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் ரன்வேகம் உயரவே, ராயுடு 16 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.

டேவிட் மிரட்டல்
கடைசி கட்டத்தில் டிம் டேவிட் சிக்ஸர் மழை பொழிந்து 41 (15) ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.

MI Emirates 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் குவித்தது. கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய Gulf Giants அணியில் தொடக்க வீரர் ஜேமி ஸ்மித் 17 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த காக்ஸ் முதல் பந்திலேயே வெளியேற, தொடக்க வீரரும் கேப்டனுமான ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியில் மிரட்டினார்.

பரூக்கி துல்லிய பந்துவீச்சு
எனினும் உஸ்மான் கான் (22) விக்கெட்டை இழக்க, வின்ஸ் அரைசதம் (52) விளாசி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஹெட்மையர் (15), ஜனத் (1) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.

தனியாளாக அதிரடி காட்டிய ஓவெர்ட்டன் 18 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 41 ஓட்டங்கள் எடுத்தார். போல்ட், பரூக்கியின் துல்லியமான பந்துவீச்சினால் Gulf அணி 161 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.

பரூக்கி 4 விக்கெட்டுகளும், போல்ட் 2 விக்கெட்டுகளும், பிராவோ மற்றும் வாக்கர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். டிம் டேவிட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

SHARE