அடர்ந்த காட்டு வழியில் சிங்கங்கள் மத்தியில், 32 வயது பெண், ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது நிறைமாத கர்ப்பிணியான மேன்குபென் மக்வானா என்ற பெண்ணுக்கு, ஜூன் 29ஆம் திகதி இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அம்ரேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தின் அருகே கிர் வனப்பகுதி வழியாக ஆம்புலன்ஸ் வண்டியில் சென்று கொண்டிருந்த போது மேன்குபென்னுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.
இதனால், மேன்குபென் வண்டியை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.
அது அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போதும் தைரியமாக வாகனத்தை நிறுத்தி, மகப்பேறு மருத்துவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் அளித்த தகவலின் படி பிரசவம் பார்த்துள்ளனர்.
இதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால், மனிதர்கள் இருப்பதை உணர்ந்த 12 சிங்கங்கள் ஆம்புலன்ஸ் வண்டியைச் சுற்றிவந்துள்ளன.
இதில், உள்ளூரைச் சேர்ந்த ஜாதவ் என்பவர் உடன் இருந்ததால் சிங்கம் குறித்து அச்சப்படாமல், அவற்றை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார்.
இந்த இடைபட்ட நேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனையை பிரசவம் நடந்ததில், அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஜாதவ் மெல்ல ஆம்புலன்ஸ் வண்டியை நகர்த்த, சிங்கங்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அழகாக வழிவிட்டு சென்றுள்ளன.
தாயும் சேயும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன். அவர்கள் இருவரும் இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.