சிங்கம் என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் மூன்றாவது பாகமான சிங்கம் 3 அல்லது எஸ் 3 என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்துவருகின்றார். இப்படமானது சர்வதேச குற்றவாளிகளை களையெடுத்தல் எனும் மையக் கருவைக் கொண்டு முழு வீச்சில் உருவாகி வருகின்றது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் சூட்டிங் இடம்பெற்று வருகின்றது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பானது அண்மையில் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது படப்பிடிப்பு தளத்தில் ஏராளமான ரசிகர்கள் வயது வேறுபாடு இன்றி வந்து சூர்யாவை நேரில் பார்த்துள்ளனர். நடிகர் சூர்யாவும் அவர்களை நெருங்கி நலம் விசாரித்துள்ளார். இச் சந்தர்ப்பத்தில் வயதான மூதாட்டி ஒருவர் ஆனந்தக் கண்ணீர் மல்க சூர்யாவை நெருங்கி அவரை நலம் விசாரித்துள்ளார்.