சிங்களவரின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழர், முஸ்லிம்களின் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டியது – இன்றியமையாததாகும்:-

288

 

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இடம்பெற்றதனைப் போன்றே இம்முறையும் மீண்டும் அது நடந்துள்ளது. அதாவது கூட்டணி, முன்னணி அல்லது வேறும் பெயர்களில் ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கங்களைப் போன்றே இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இவ்வாறு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்பதனை இரண்டு கட்சிகளும் முன்னதாகவே அறிந்திருந்தன.ranil-wickramasinghe-udaya-gammanpila-chandrika-sambanthan
தற்போதைய இரண்டு பிரதான கட்சிகளினாலும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளமையே இதன் மூலம் புலப்படும் யதார்த்தமாகின்றது.
எவ்வாறெனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன. இதன் ஊடாக இணக்கப்பாட்டு அரசாங்கம் (அவர்கள் சொல்வதனைப் போன்று) உருவாவதற்கான அடிப்படை மாற்றம் உருவாகியுள்ளது.
அது மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் மக்கள் மீது திணி;த்திருந்த அடக்குமுறையை விடவும் பெறுமதியானது. நல்ல நிலைமை ஏற்படும் என ஒரளவு நம்பிக்கைக் கொள்ள முடியும். இதனால் ஏனைய தேர்தல்களுடன் ஒப்பீடு செய்யும்போது இந்த தேர்தல் நீதியானதும் சுதந்திரமான பண்புகளை அனுபவிக்க இந்த நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக கீழிறங்கியுள்ளார்.
இலங்கைப் பாhளுமன்றில் ஏதேனும் ஓர் வகையில் எதிர்க்கட்சித்தலைவர் பதவி தெற்கு சிங்கள அரசியல்வாதி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிலைமை நீடித்து வருகின்றது. ஏதேனும் அரசியல் அடிப்படையில் அல்லது தற்காலிக அடிப்படையிலேனும் தெற்கு சிங்கள அரசியல்வாதி ஒருவரிடம் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற நிலைமை காணப்படுகின்றது.
அங்கு சிங்களம் அல்லாத அரசியல்வாதிகளினால் பாராளுமன்றில் செயற்பாட்டு அரசியல் தலைமைத்துவமொன்றை கட்டியெழுப்ப பெரும்பான்மையினமென நாமகரணம் கூறும் சிங்கள பெரும்பான்மை சமூகத்தினால் நினைத்துக்கூட பார்க்க அவகாசமில்லை.
30 ஆண்டுகளாக நாட்டில் பெருக்கெடுத்து ஓடிய இரத்தி வெள்ளத்தினால் கூட கற்றுக்கொள்ள முடியாத அரசியல் பாடமாகவே இந்த நிலைமை காணப்படுகின்றது. தமிழ் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை இன சமூகங்களுக்கு அரசியலில் கிடைக்க வேண்டிய மெய்யான பிரதிநிதித்துவத்திற்கான கதவுகள் இதுவரையில் இலங்கை அரசியலில் திறக்கப்படவில்லை.
மறுபுறத்தில் இன்னமும் பல்வகைமையுடை அரசியலாக இலங்கை அரசியலைப் பார்க்க பெரும்பான்மையான அரசியல் சமூகங்கள் விரும்புவதில்லை.
எனினும், மஹிந்த ராஜபக்ஸவின் யுத்த வெற்றி இறுமாப்பினால் போசிக்கப்பட்ட, அதன் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்காம் சக்தியாக உருவாகியுள்ளது. தேர்தல் புள்ளி விபரங்கள் இதனையே பறைசாற்றுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு அரசாங்கமொன்றை அமைக்க இணங்கியுள்ளன. ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஜே.வி.பி. எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்பதாக அறிவித்துள்ளது.
எனினும், கூடுதலான ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது.
தேர்தல் முடிவு புள்ளி விபரங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எதிர்க்கட்சி தலைமைப் பதவியை வகிக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் அது அரசியல் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமையும்.
எனவே, இனியாவது பல்வகைமை அரசியல் கலாச்சாரத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவி வழங்குவது மிகவும் காலோசிதமான தீர்மானமாக அமையும்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இனவாத கொள்கைகளை வியாபித்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் இன்னமும் தெற்கில் முற்றுமுழுதாக முடிவுறுத்தப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியிலும் ஒரு சில இனவாதிகள் தொடர்ந்தும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இனவாதிகள், மதவாதிகள் எவ்வளவு குதித்தாலும் பண்புடைய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கிக் கட்டியெழுப்ப வேண்டிய காலத்தின் தேவை விஞ்சி நிற்பதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
இலங்கை வாழ் மக்கள் கடந்த சில காலங்களாகவே பண்புடை அரசியல் கலாச்சாரத்தை அனுபவிக்க அல்லது உணரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் உலகின் வளர்ச்சியடைந்த சமூகங்ளினால் பின்பற்றப்படும் அரசியல் கலாச்சாரத்தை நாமும் பின்பற்ற தயங்கக்கூடாது. அவ்வாறு செய்யாமல் இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்திவிட முடியாது.இம்முறை பொதுத் தேர்தலில் ஜே.வி.பி கட்சி 4.86 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டு ஆறு ஆசனங்களை தனதாக்கிக் கொண்டதுடன், 4.62 வீது வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டுள்ளது.
எனினும் இதனை ஜே.வி.பி உள்ளிட்ட சில பிற்போக்குச் சக்திகள் பிழையாக அர்த்தப்படுத்தி வருகின்றன.
இவ்வாறான பிழையான கருதுகோள்களை உடையவர்களுக்கு ஒன்றை மட்டுமே எம்மால் சொல்ல முடியும்.
சிங்களவரின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழர், முஸ்லிம்களின் சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

SHARE