சிங்கள அரசியல்வாதிகளினால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
1958ம் ஆண்டு பண்டாரநாயக்க செல்வநாயம் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.அந்த ஆண்டில்தான் ஆயுதம் ஏந்தம் யுகமொன்று உருவானது.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஊடாக 13ம் திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போர் காரணமாக தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணியின் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்குமாறு கோருகின்றோம்.
தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் மீளவும் அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்கத்திடம் கோருகின்றோம். இதன் ஊடாக நல்லிணக்கத்திற்கான முனைப்புக்களை வெளிப்படுத்த முடியும்.
மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அமைப்புக்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பிரதேசங்களிலிருந்து படையினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
மத வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இறுதிக் கட்ட போரின் போது மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை.
இந்த புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கரிசனை காட்டும் என கருதுவதாக டாக்டர் சிவமோகன் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.