இலங்கை நாடு ‘சிங்ஹ லே’ ( சிங்கள – இரத்தம்) இல்லாமல், ஏகமா-லே (ஒரே – இரத்தம்) எனும் தொனிப்பொருளின் கீழ் ஒன்றிணைக்கக் கூடிய சவால் எம்மத்தியில் காணப்படுகிறது.
அதேபோன்று இனம் மற்றும் சமயங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்வது தொடர்பில் நாம் தைரியமாக செயற்படுவது காலத்தின் தேவை எனவும் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஆயர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.