சிசு கொலை தொடர்பில் சந்தேகநபராக கைது செய்யப்பட்ட சிசுவின் தந்தைக்கு விளக்கமறியல்

301
திம்புள்ள – பத்தனை, குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற சிசு கொலை தொடர்பாக சந்தேக நபராக கைது செய்யப்பட்ட சிசுவின் தந்தையை  எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹற்றன் நீதவான் பிரசாத் லியனகே உத்தரவிட்டுள்ளார்.

சிசுவின் சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் சிசுவின் தாய் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஒன்பது மாதங்களான ஆண் சிசுவுக்கு தாய் புட்டிப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் தாய்க்கும், தந்தையான அருள்தாஸ் ஸ்டென்லிக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்படுகையில் தாயின் கையில் இருந்த சிசுவான எஸ்.பிஸாலன் (மாதம் ஒன்பது)  தந்தையால் பிடுங்கி நிலத்தில் அடிக்கப்பட்டார்.

அதன்பின் கல் ஒன்றால் தாயும் தாக்கப்பட்டு உள்ள நிலையில் தாயை கொட்டகலை வைத்தியசாலைக்கு அயலவர்களால் கொண்டு செல்லபட்ட வேளையில் அதே நேரம் சிசுவை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை தாய் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

எனினும் குறித்த தாய் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின் சிசுவின் மரண விசாரணைகள் இடம்பெறும் என தெரியவந்துள்ளது.

stanly

SHARE