எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மகளிர் இரட்டையர் வரிசையில் அசத்தி வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, Ace against Odds என்ற பெயரில் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் சினிமா குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சானியா மிர்சா, சினிமாவில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு நீண்ட நாட்களாகவே இருப்பதாகவும், அதே சமயம் சினிமாவில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எனது வாழ்க்கை வரலாறு குறித்த படம் எடுக்கப்படுமா? என்பது எனக்கு தெரியாது. அப்படி எடுக்கப்பட்டால் அதனை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுவேன்.
சினிமா தயாரிப்பாளர் பராக்கான் எனக்கு நல்ல நண்பர். அவர் என்னை வைத்து படம் எடுக்க இருப்பதாக வெளியான செய்தியில் உண்மை எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார்.