அஜித் சினிமாவில் தனித்துவம் வாய்ந்தவர். அவரை பயணத்தை எடுத்துக் கொண்டால் ஒரே பாதையாக இருக்காது, நடிப்பை தாண்டி மற்ற விஷயங்களிலும் ஈடுபாடு அதிகம்.
அதேபோல் சினிமாவிலும் ஆரம்பத்தில் காதல் படங்களாக நடித்தாலும் பின் வெவ்வேறு கதைகளாக தேர்வு செய்து நடித்தார், அப்படி புதிய முயற்சியில் ஒரு சில இடங்களில் தடுமாறினாலும் கடைசியில் ஜெயித்தார்.
இவர் எப்போதோ ஒரு பேட்டியில் என்னை வைத்து இயக்க புதிய கதைகளோடு இயக்குனர்கள் வருவது இல்லை. ஷாருக்கான் வித்தியாசமாக நடிப்பது போல் கதைகள் இருந்தால் நல்லது. ஆனால் இயக்குனர் அதற்கு தைரியமாக முன் வருவது இல்லை, அது எனக்கு ஏமாற்றம் தருகிறது என கூறியுள்ளார்.
ஆனால் மங்காத்தா படத்தில் அஜித் அந்த ஆசையை நிறைவேற்றி வெற்றி பெற்றதை நாம் யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயம்.